மாஸ்டர் படத்தில் இருந்து BGM-ஐ சுட்ட யுவன்.! ஆதாரங்களுடன் யுவனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

வெளியிட்டது

யுவன் சங்கர் ராஜா தனது இசையால் பலரது உள்ளங்களை கட்டி போட்டு இருப்பவர். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மையாளராக இருக்கிறார். மேலும் தமிழ் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியதும் இவரை தான். இவர் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். 1996 ஆம் ஆண்டில் தன்னுடைய 16 வது வயதில் அரவிந்தன் என்ற படத்திற்காக இசையமைத்து தனது திரைத்துறை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 2001 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய லெவலில் ஹிட் அடிக்க, இவர் மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆனார். 2015 ஆம் ஆண்டில் இவர் சொந்தமாக u1 ரெக்கார்ட்ஸை உருவாக்கி சொந்தமாக தயாரிப்பு ஸ்டுடியோவையும் நடத்தி வருகிறார்.

மாஸ்டர் படத்தில் இருந்து BGM-ஐ சுட்ட யுவன்.! ஆதாரங்களுடன் யுவனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் 1

அன்று தொடங்கி இன்று வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தும், சில படங்களில் பாடல்கள் எழுதியும், சில படங்களில் பிஜிஎம் மட்டும் இசையமைத்துக் கொடுத்தும் இருக்கிறார் யுவன். மேலும் பல படங்கள் இவர் இசையமைப்பில் வெளிவரவும் இருக்கின்றன. அந்த வகையில் இன்று வெளியான படம் தான் விருமன். இந்த படத்திலும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதில் ஒரு பாடல் கஞ்சா பூ கண்ணால, இன்னொரு பாடல் மதுரை வீரன். இந்த மதுரை வீரன் பாடலை அதிதி சங்கருடன் இணைந்து யுவனே பாடி இருக்கிறார். இந்த நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், யுவன் மீது மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதில் யுவன் சங்கர் ராஜா மாஸ்டர் படத்தில் வரும் பிஜிஎம்-ஐ அப்படியே காப்பி அடித்து விருமன் படத்திற்கு டைட்டில் ட்ராக்காக வைத்திருக்கிறார் என்று சிலர் வீடியோக்களை வெளியிட்டு விட்டரில் யுவனை கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் யுவன் மங்காத்தா படத்தில் வரும் பிஜிஎம்-ஐ ஒரு ஆங்கிலத் திரைப்படத்திலிருந்து காப்பி அடித்து இருந்தார் என்று ட்விட்டரில் ஆதாரத்துடன் கலாய்த்து இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் விருமன் படத்தின் டைட்டிலையும் மாஸ்டர் படத்தின் பிஜிஎம்ஐயும் ஒப்பீடு செய்து இவர் அந்த படத்தில் இருந்து தான் இந்த டைட்டில் ட்ராக்கை காப்பி அடித்திருக்கிறார் என்று இணையதளவாசிகள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு யுவனின் ரசிகர்கள் மறுப்பும் தெரிவித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ரசிகர்களோ அந்த மாஸ்டர் திரைப்படத்தின் பிஜிஎம்-ஏ சென்னை 28 படத்தில் இருந்து சுட்டதுதான் என்று வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்