திடீரென முடிவுக்கு வந்த ஜீ தமிழ் சீரியல்.! வெளியான கடைசி புகைப்படம்.!

வெளியிட்டது

புதிய சீரியல்கள் பலவற்றின் வரவால் பழைய சீரியல்கள் தற்போது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சீதா ராமன்’ சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அந்த கடைசி நாள் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் பல வருடங்களாக சின்னத்திரை நாடகங்களை ஒளிபரப்பி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கின்றனர்.

திடீரென முடிவுக்கு வந்த ஜீ தமிழ் சீரியல்.! வெளியான கடைசி புகைப்படம்.! 1

அந்த வகையில் ஜீ தமிழ் சீரியலும் பல நல்ல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. கடந்த வருடம் ஒளிபரப்பாக தொடங்கிய ‘சீதாராமன்’ சீரியல் தற்போது முடிவுக்கு வருகிறது. ஜெய் டிசோசா, பிரியங்கா நல்காரி_ ரேஷ்மா பசபுலேட்டி ஆகியோருடன் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி திடீரென விலகி இருந்தார். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிக்க வந்திருந்தார்.

இந்த நிலையில் சீரியலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்த சீரியலை முடித்திருக்கிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி. கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகர்கள் அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்