குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் ஷாலின் ஜோயா. திரைப்பட நடிகையான இவர் பல குறும்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் தமிழில் கண்ணகி படத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர். மேலும் பிரபல யுடியூபர் டிடிஎப் வாசனை இவர் காதலித்தும் வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஜோயாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது. தற்போது தொடர்ந்து படங்கள் நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.

இவர் பிரபல யுடியூபர் TTF வாசனை காதலித்து வருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இருவரும் விரைவில் திருமணம் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். மேலும் ஜோயாவின் பிறந்தநாளை வாசன் பிரம்மாண்டமாக கொண்டாடி வீடியோக்கள் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கல்யாணம் குறித்து ஜோயா போட்ட பதிவு ஒன்று ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் திருமணமான சித்தார்த் மற்றும் அதிதி புகைப்படங்களை பகிர்ந்த ஜோயா, எனக்கு திருமணம் ஆக வாய்ப்பு குறைவுதான், திருமணம் நடந்தால் புகைப்படங்கள் இதுபோலத்தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போ வாசன் உடன் பிரேக்அப் ஆகிவிட்டதா என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.