அமேசான் காட்டு தீ மக்களுக்கு பேராபத்து : நாசா அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள்

பிரேசில் நாட்டில் அமைந்துள்ள மிக படர்ந்த பெரிய காடு தான் அமேசான் காடுகள். இந்த காட்டில் ஏற்பட்ட தீ கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி முதல் மிக பரவலாக தீ பரவுகிறது. உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற காடு என்றால் அது அமேசான் காடுகள் தான் இதில் மிகவும் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை அதுமட்டுமல்லாமல் அரிய வகை விலங்குகளும் உள்ளன. இந்த காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, கயானா ஆகிய நாடுகளில் படர்ந்துள்ளது. இருப்பினும் இது பிரேசில் நாட்டில் மட்டுமே அதிகமாக படர்ந்துள்ளது. எனவே இந்த தீயை அணைக்க பிரேசில் நாட்டின் அரசு கிட்டத்தட்ட 80 ஆயிரம் தீயணைப்பு வீரர்களை தீயை அணைக்க ஈடுபடுத்தப்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் தீயை அணைக்க வீரர்களுக்கு மிக பெரிய சவாலாகவே உள்ளது. கடந்த ஆகஸ்ட் 8 முதல் போகாடியும் இதுவரை தீயை அணைக்க முடியாமல் திணறுகிறது பிரேசில் அரசு.

அமேசான் காட்டு தீ மக்களுக்கு பேராபத்து : நாசா அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் 1

அமேசான் காட்டு தீயால் அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் விலங்குகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி அப்பகுதி மக்கள் காடுகளை பாதுகாக்க அந்த நாட்டின் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  J & K இல் இணைய துண்டிப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில் நாசா விண்வெளி ஆய்வு மையம் மிகவும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 22 வரை பரவிய மிக பரவலான காட்டு தீ வளிமண்டலத்தில் கார்பன் மோனோ ஆக்சைடு வாயுவை பரப்பியுள்ளது எனவும் இது வளிமண்டலத்தில் பல பகுதிகளில் பரவியுள்ளது எனவும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்கள் செல்லச் செல்ல அங்குள்ள மேகங்களில் கலந்துள்ள கார்பன் மோனோ ஆக்சைடு அமேசான் காட்டின் வட மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும் பரவி வருகிறது என்றும் வரைபடம் ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

அமேசான் காட்டு தீ மக்களுக்கு பேராபத்து : நாசா அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் 3

நாசா வெளிட்ட வரைபடத்தில் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில் கார்பன் மோனோ ஆக்சைடு வாயு அதிக அளவில் படர்ந்துள்ளது எனவும் அது வளிமண்டலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது மிகவும் வேகமாக பரவ கூடிய வாயு என்பதால் இது சுற்று சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாக தான் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது நாசா விண்வெளி ஆய்வு மையம். இது நன்கு காற்றுடன் கலந்துள்ள நிலையில் இந்த காற்றை அங்கு உள்ள மக்கள் சுவாசிக்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளது நாசா அமைப்பு. இதை வளிமண்டல அக சிவப்பு ஒளி மூலம் கண்டறிந்துள்ளது நாசா அமைப்பு. இந்த வாயு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதால் அங்குள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment