ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீ…பல கோலா கரடிகள் பலி!!

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீ...பல கோலா கரடிகள் பலி!! 1

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது வரை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இதனால் சுமார் 2000க்கும் மேலான கோலா கரடிகள் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் சுமார் 100க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதால் 500 வீடுகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். பல ஏக்கர் விவசாய நிலங்கள் தீயில் கருகின. ஆனால் தற்போதும் காட்டுத்தீ முற்றிலுமாக கட்டுப்படுத்த இயலவில்லை. சுமார் 50 இடங்களில் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வரை சுமார் 2000க்கும் அதிகமான கோலா கரடிகள் அழிந்துவிட்டதாக ஆஸ்திரேலிய சூழலியல் நிபுணர் டிலான் பக் கூறியுள்ளார். அவர்

விளம்பரம்

“ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத்தீ கோலா கரடிகளின் வாழ்விடத்தையும் சுமார் 25 சதவிகித தொகையையும் முற்றலுமாக அழித்து விட்டது. மேலும் இனி காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றால் அந்நாட்டிலுள்ள சுமார் 80,000 கோலா கரடிகள் முற்றிலுமாக அழிந்து விடும்.”

என்று கூறியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment