உலகின் மிகப்பெரிய தீவிரவாதி அபுபக்கர் கொலை!!

உலகின் மிகப்பெரிய தீவிரவாதி அபுபக்கர் கொலை!! 1

சிரியாவின் ஆளும் அரசுக்கு எதிராக உருவான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் கூறியுள்ளார். ஒசாமா பின்லேடனுக்கு அடுத்து உலகத்தில் மிகப் பெரிய தீவிரவாதியாக அபுபக்கர் அல்-பாக்தாதி உள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக பதுங்கியிருந்த அல்-பாக்தாதி வடமேற்கு சிரியாவில் யு.எஸ். சிறப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் “சத்தமிட்டு அழுதார்” என்றும் கொல்லப்பட்டார் என்றும1 ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இது ஜிஹாதி குழுவுக்கு பெரும் அடியாக இருக்குமென்றும் டிரம்ப் அவர்கள் கூறியுள்ளார். அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்று அபுபக்கர் சுரங்கப்பாதையின் இறுதிக்குச் சென்றதால் மேலும் தப்பிக்க முடியாமல் அவர் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

மற்றவர்களை மிரட்டுவதற்கு கடினமாக முயன்ற தீவிரவாதி அபுபக்கர் தனது கடைசி தருணங்களை முழு பயத்திலும், பீதியிலும், அச்சத்திலும் கழித்தார் என்று டிரம்ப் அவர்கள் கூறியுள்ளார். அபுபக்கரை அழிப்பதற்கு ஆதரவு அளித்த ரஷ்யா, ஈராக், துருக்கி, சிரியா நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தார். இனி அபுபக்கரால் மக்களுக்கு எந்த தீங்கும் நேராது என்றும் கூறியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment