கம்பீர் குறித்து பாக். வீரர் இப்ரான் பேட்டி!

இந்திய வீரர் கம்பீர் ஒருநாள் போட்டிகளிலிருந்து தன்னால் தான் வெளியேறினார் என பாகிஸ்தானின் இடது கை வேக பந்துவீச்சாளர் இப்ரான் தெரிவித்துளளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகளும், 2 டி20 போட்டிகளும் இந்தியாவில் நடைபெற்றது. இதில் டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்று சமன் செய்தன. ஆனால் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

விளம்பரம்

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது இப்ரான், இப்போட்டியை நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.

கம்பீர் குறித்து பாக். வீரர் இப்ரான் பேட்டி! 1

அதில், “2012ஆம் ஆண்டு நான் இந்தியாவிற்கு எதிராக விளையாடிய போது, என்னுடைய பந்தை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் திணறினார்கள். அதுமட்டுமின்றி என்னுடைய உயரம் காரணமாக அவர்களால் பந்தினை சரியாக கவனிக்க முடியவில்லை” என்றார்.

விளம்பரம்

இதுகுறித்து மேலும் கூறிய அவர், “இரு அணிகளும் வலை பயிற்சியில் ஈடுபடும் பொழுது, என்னுடன் பேசுவதையோ, என்னை பார்ப்பதையே கம்பீர் தவிர்த்து வந்தார். அந்த தொடரில் அவரை 4 முறை வெளியேற்றினேன் என்பது எனக்கு சரியாக நினைவிருக்கிறது. என்னை பார்த்தாலே அவர் பயம் கொள்வார். அதுவே அவரின் கடைசி கால போட்டியாகவும் அமைந்தது. கம்பீரின் ஒருநாள் போட்டிக்கு முழுக்கு போட்டதற்கு மக்கள் என்னை பாராட்டினார்கள்.” என்றார்.

தொடர்புடையவை  திலக் வர்மா தான் மும்பையின் அடுத்த நட்சத்திர ஆட்டக்காரர் - புகழும் இர்பான் பதான்.

அதே போல், இப்பேட்டியில் கோலி மற்றும் யுவராஜ் ஆகியோருடன் கொண்ட நினைவுகளை முகமது இப்ரான் பகிர்ந்துக்கொண்டார். பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியில் ஏற்பட்ட சூதாட்டம் காரணமாக முகமது இப்ரான் அணைத்து வகையான போட்டியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment