
நவீன புற்றுநோய் சிகிச்சையின் கீமோதெரபியினால் தூண்டப்பட்ட முடி உதிர்தல் மிகவும் உளவியல் ரீதியாக துன்பகரமான பக்க விளைவுகளில் ஒன்றாகும். ஆதலால் நோயாளிகளுக்கு சிகிச்சையினால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு நூதனமான முறையை கண்டு பிடித்துள்ளனர்.
இ.எம்.பி.ஓ மூலக்கூறு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு டாக்சேன்கள் மற்றும் புற்றுநோய் மருந்துகளால் மயிர்க்கால்களில் ஏற்பாடு சேதங்களையும், நிரந்தரமாக முடி உதிர்தலையும் தடுப்பதைப் பற்றி விவரிக்கிறது.
இதற்காக ஆராய்ச்சியாளர்களின் குழு சி.டி.கே 4/6 இன்ஹிபிட்டர்கள் எனப்படும் புதிய வகை மருந்துகளின் பண்புகளை பயன்படுத்தியுள்ளனர். இது உயிரணு (செல்) பிரிவைத் தடுக்கிறது. மேலும் அவை ஏற்கனவே “இலக்கு” புற்றுநோய் சிகிச்சைகள் என்று அழைக்கப்பட்டு மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சி.டி.கே 4/6 இன்ஹிபிட்டர்களை முதன்முதலில் மயிர்க்கால்களில் நச்சு விளைவை ஏற்படுத்தாமல் உயிரணு (செல்) பிரிவைத் தற்காலிகமாக தடுக்க பயன்படுத்தப்பட்டது. மேலும் இதனை உறுப்பு வளர்ப்பு மனித உச்சந்தலையில் தேய்க்கப்பட்டபோது மயிர்க்கால்களுக்கு டாக்சேன்களால் மிகவும் குறைந்த அளவில் தான் பாதிப்பு ஏற்பட்டதாக மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முன்னணி எழுத்தாளர் தல்வீன் பூர்பா கூறியுள்ளார்.
டாக்சேன்கள் மிகவும் முக்கியமான புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாகும். இது மார்பக அல்லது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. சில சமயங்களில் நிரந்தர முடி உதிர்வையும் ஏற்படுத்துகிறது.