
ஜப்பானில் 2020ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான சோதனைப் போட்டி தற்போது ஜப்பானில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று குத்து சண்டைக்கான ஒலிம்பிக் சோதனைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பூஜா ராணி மற்றும் சிவா தபா தங்கம் வென்றனர்.
இந்தியாவின் பூஜா ராணி மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கெய்ட்லின் பார்க்கர் என்பவரைத் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார். பூஜா அவர்கள் இதற்கு முன்பு ஆசிய போட்டிகளில் வெண்கல பதக்கம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குத்து சண்டையின் ஆண்களுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிவா தபா என்பவர் கஜகஸ்தான் நாட்டின் தேசிய சாம்பியன் மற்றும் ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவரான சனடாலி தொல்டாயேவை வென்று தங்கப்பதக்கம் பெற்றார். தபா அவர்கள் ஏற்கனவே 4 முறை ஆசிய பதக்கமும் நடப்பு தேசிய சாம்பியன் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இந்தியாவின் ஆஷிஷ் 69 கிலோ எடைப் பிரிவில் ஜப்பானின் சூவன் ஒகாஜவாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.