கைதி – பிகிலுக்கு 24 மணி நேரமும் ஒளிபரப்ப சிறப்பு அனுமதி!!

கைதி - பிகிலுக்கு 24 மணி நேரமும் ஒளிபரப்ப சிறப்பு அனுமதி!! 1

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கைதி மற்றும் பிகில் படங்கள் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதும் என்பதால் கூட்டத்தை சமாளிக்க 24 மணி நேரமும் திரையிட சிறப்பு அனுமதி கேட்டு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தீபாவளி வெளியீட்டு பட்டியலில் இருந்து சங்கத்தமிழன் பின்வாங்கி இருக்கும் நிலையில், தீபாவளிக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை 25 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளது.
பிகில் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் என்று சிலர் வதந்தி பரப்பிவரும் வந்தாலும் தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக பிகில் மற்றும் கைதி ஆகிய இரு படங்களுக்கும் 24 மணி நேர தொடர் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

விளம்பரம்

இதற்காக அரசின் அனுமதி கேட்டு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தனியாகவும் , படத்தின் தயாரிப்பாளர்கள் தனியாகவும் கோரிக்கை மனுவை அரசின் அனுமதிக்காக அனுப்பி உள்ளனர்.தற்போது தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தினாலும் பட வெளியீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பாக 24 மணி நேர தொடர் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நம்பிக்கை கூறியிருக்கிறார்.

தொடர்புடையவை  ஜாலியாக குத்தாட்டம் போடும் ஜெயம் ரவி.! 'சைரன்' படத்திலிருந்து "அடி ஆத்தி.." பாடல் வெளியானது.!

மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் 24 மணி நேர காட்சிக்கான சிறப்பு அனுமதி கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் திரையரங்குகளில் கால நேரமில்லாமல் விஜய் ரசிகர்களின் பிகில் சத்தம் காதை கிழிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment