சமந்தாவுக்கும், மாமனாருக்கும் இடையே பிரச்சனை நிலவுகிறதா…??

சமந்தாவுக்கும், மாமனாருக்கும் இடையே பிரச்சனை நிலவுகிறதா...?? 1

சோப்பு விளம்பரம் ஒன்றில் தனது மாமனார் நாகர்ஜுனாவுக்கு நேர் எதிராக பேசியுள்ளார் சமந்தா. இதனால் அவர்களின் குடும்பத்தில் பிரச்சனை இருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது.முன்னணி சோப்பு நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் நாகர்ஜுனா சோப்புக் கட்டியை ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்து, சான்று வழங்குவதை பார்ப்பது போன்று காட்டியுள்ளனர்.

முதலில் பயன்படுத்துங்கள், பின்னர் நம்புங்கள் என்று நாகர்ஜுனா வசனம் பேசுகிறார். இந்நிலையில் அந்த சோப்பு நிறுவனத்திற்கு போட்டியாக உள்ள மற்றொரு நிறுவனத்தின் விளம்பரத்தில் நாகர்ஜுனாவின் மருமகளான சமந்தா லட்சக்கணக்கான வீடுகளில் பயன்படுத்தப்படும் சோப்பை ஆய்வகத்தில் சோதிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

சமந்தாவின் இந்த விளம்பரத்தையும் அவர் வாங்கியம் வெளிபடுத்திய விதமும் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் பேசிய வசனம் நாகர்ஜுனாவை கிண்டல் செய்வது போன்றும் உள்ளது என கூறியுள்ளனர். இதை சமந்தா தெரிந்து செய்தாரா, தெரியாமல் செய்தாரா என்று திரையுலகினரும், ரசிகர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.வசனத்தை சொல்லிக் கொடுக்கும்போதே இது என் மாமனாரை கிண்டல் செய்வது போன்று இருக்கிறதே என்று சமந்தா சொல்லியிருக்கலாமே என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடையவை  வெந்து தணிந்தது காடு படத்தின் "உன்ன நினைச்சதும்" பாடல் வெளியானது..! வேற லெவல் பாட்டு

மன்மதுடு 2 படத்தில் நாகர்ஜுனா ப்ளேபாய் போல நடித்தது சமந்தாவுக்கு பிடிக்கவில்லை என்று பேசப்படுகிறது. இந்த வயதில் இப்படிப்பட்ட கதாபாத்திரமா என்று சமந்தா நினைத்தாராம். இந்நிலையில் விளம்பர படத்தில் இப்படி ஒரு வசனத்தை பேசியுள்ளார் சமந்தா.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment