தமிழகத்தின் இடை தேர்தல்! மக்கள் பழனிசாமி அரசுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள்!! வைகோ பேச்சு…!!

தமிழகத்தின் இடை தேர்தல்! மக்கள் பழனிசாமி அரசுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள்!! வைகோ பேச்சு...!! 1

பாஜக அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகங்களுக்கு துணையாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21-ல் நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில்
விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் முறையே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக மதிமுக முழு அளவில் களத்தில் பணியாற்றும் எனவும் கூறியுள்ளார்.தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருகிற மத்திய பாஜக அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயல்படுகிற எடப்பாடி பழனிசாமி நடத்தும் அரசுக்கு இடைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  சபரிமலை வழக்கு: மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான கேள்விகளை வைக்கும் உச்ச நீதிமன்றம்

தமிழக சட்டப்பேரவையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்க முடியாது என்று மத்தியில் உள்ள பாஜக அரசு உடனடியாக மறுத்துவிட்டதை இரண்டு ஆண்டு காலமாக தமிழக மக்களுக்கு தெரியாமல் மறைத்து, தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி கழுத்து அறுத்த இந்த அதிமுக அரசின் செயலை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் டெல்லியின் காலடியில் அடகுவைத்து அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிசாமி அரசை ஆட்சி இருக்கையில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற மனகொந்தளிப்பு தமிழக மக்கள் உள்ளத்தில் எப்போதோ எழுந்துவிட்டது. அதற்கு முன்னோட்டமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளித்துள்ளார்கள்.
தற்போது விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் ஆகியவற்றிலும் மக்கள் விரோதம் அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் காத்திருக்கின்றார்கள்.

விளம்பரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
புதுவை மாநிலத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு புதுவை மாநில மதிமுக நிர்வாகிகள், கழகக் கண்மணிகள் களப்பணி ஆற்ற வேண்டும்” என்று வைகோ கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment