புதிய டி20 போட்டியில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா!!

புதிய டி20 போட்டியில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா!! 1

கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா மற்றும் பலர் வருகிற கிரிக்கெட் டி20 சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்று விளையாடப் போவதாக கூறியுள்ளனர். சாலை பாதுகாப்பை ஊக்குவிக்கும் விதமாக இந்த போட்டியில் விளையாட உள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, முத்தையா முரளிதரன், ஜாக்குயஸ் காலிஸ், பிரட் லீ, ஷிவ்நாரைன் சந்தர்பால், விரேந்தர் ஷேவாக், திலகரத்னே தில்ஷன், தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் இந்தியாவில் 2020ம் ஆண்டு பிப்ரவரி 2-16 வரை நடக்கவிருக்கும் சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்த உலகத் தொடர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் டி20 போட்டியாகும்.

விளம்பரம்

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 2013 ல் ஓய்வு பெற்ற பின்னர் மூன்றாவது முறையாக கிரிக்கெட் விளையாட உள்ளார். இதற்கு முன்பு 2014 இல் லார்ட்ஸில் நடந்த ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் லெவன் அணிக்கு எதிராக எம்.சி.சி மற்றும் 2015 இல் அமெரிக்காவில் மூன்று கண்காட்சி டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment