Categories: அரசியல்

அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்வினை: ஸ்டாலின்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், அமித்ஷா கருத்துக்கான எதிர்வினை குறித்து முடிவெடுக்கப்படும் தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப் 14) தெரிவித்துள்ளார்.

1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய அலுவல் மொழியாக இந்தி மொழி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மத்திய அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா, தந்து டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி இருக்க வேண்டும், ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்றால், அது பரவலாக பேசப்படும் இந்தி மொழியாகும் என தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, ஒரே நாட்டிற்கு ஒரே மொழி இந்தி தான் என்று அமித் ஷா அவர்கள் சொல்லியிருக்கிறார். பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் இதுபோன்று கருத்து கூறியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலத்த அவர்,

பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இது போன்று 2வது முறையாக தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் ரயில்வேயில், தபால் அலுவலகங்களில்,அது தேர்வாக இருந்தாலும், வேலை வாய்ப்பாக இருந்தாலும், அறிக்கைகளாக இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் இடம்பெறக் கூடாத ஒரு நிலையை, முயற்சியில் ஈடுபட்டார்கள்.

அதனை, ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியதற்குப் பிறகு அவைகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டிருக்கினறது.

ஆனால், திடீரென்று இன்று அமித்ஷா கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. எனவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இது நிச்சயம் அமையும். எனவே, அக்கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்துகிறேன்.

நாளைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி முடிந்த மறுநாள், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து இதனை எப்படி சந்திப்பது? எப்படி நம்முடைய எதிர்ப்புக் குரலை கொடுப்பது? என்பது பற்றி கலந்து பேசி முடிவெடுத்து அதற்குப் பிறகு அறிவிக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்