Categories: உலகம்

அமேசான் காடுகளின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்ய டிரோன்கள் பயன்படுத்தப்படுகிறது.

வெளியிட்டது
அமேசான் காடுகளின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்ய டிரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. 1

காலநிலை மாற்றத்தினால் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் காட்டுத் தீயினால் பல வளங்களையும் இழந்து வருகிறோம். எனவே ஆராய்ச்சியாளர்கள் காடுகளை புரிந்துகொள்வதற்கும் அதன் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கும் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஹார்வர்ட பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இப்போது அமேசான் மழைக்காடுகளின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்யவும் அதை புரிந்துகொள்ளவும் டிரோன்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். ட்ரோன் அடிப்படையிலான சென்சார்கள் மூலம் பல்வேறு மழைக்காடு சுற்றுச்சூழல் அமைப்புகளின் தனித்தன்மையை அறிந்து கொள்ள முடியுமென்று நம்பப்படுகிறது.

மேலும் இந்த டிரோன்கள் மூலம் காடழிப்பு, காலநிலை மாற்றம் மற்றும் தீ எவ்வாறு வனங்களில் நடைபெறுகிறது என்பதை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு செடிகளும் வித்தியாசமான வேதியியல் சமிக்ஞை, கொந்தளிப்பான கரிம கலவை கையொப்பம் அல்லது கைரேகை ஆகியவற்றை வெளியே கொடுக்கின்றன. இவை அனைத்தும் செடிகள் உயிரினங்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. இந்த சமிக்ஞைகள் வெள்ளம் அல்லது வறட்சி போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

ஆதலால் சமிக்ஞைகளை அல்லது கைரேகைகளை கண்காணிப்பதன் மூலம், வன சுற்றுச்சூழல் அமைப்புகள் அழுத்தங்களுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய இயலும்.

அமேசானின் கொந்தளிப்பான கரிம கலவை (வி.ஓ.சி) இதற்கு முன்பு கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால் தகவல்கள் குறைவாகவும் சார்புடையதாகவும் இருந்தது. மேலும் உயிர்க்கோள உமிழ்வு மாதிரிகள் அருகில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஒரே வி.ஓ.சியை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால் டிரோன் தொழில்நுட்பம் வெவ்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் வி.ஓ.சி உமிழ்வைப் புரிந்துகொள்ளவும் அளவிடவும் உதவுமென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்