Categories: சினிமா

அரசியல் பற்றி பேசியதால் கடுப்பான உதயநிதி…மழுப்பிய சிவகார்த்திகேயன்.

வெளியிட்டது

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படம் வருகிற 13ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் பலரும் படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பற்றி பேசியதால் கடுப்பான உதயநிதி...மழுப்பிய சிவகார்த்திகேயன். 1

இந்த படத்தின் தமிழ்நாட்டின் உரிமத்தை வாங்கி வெளியிடும் உதயநிதியும் விழாவில் பங்கெடுத்தார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை வெளியிட உள்ளது. படத்தின் விழாவில் நடிகரும், எம்.எல்.ஏவும், படத்தின் விநியோகிஸ்தரான உதயநிதி படத்தில் நடித்த சிவாவையும், அனிருத்தையும் பாராட்டி பேசினார். படத்தில் இரு டான்களாக இருவரும் உள்ளனர் என கூறினர். மேலும் ட்ரைலரில் இடம் பெற்றுள்ள அரசியல் குறித்த வசனத்தையும் தான் கவனித்ததாக கூறி சிரித்தார்.

பின்னர் பேசுகையியல் சிவகார்த்திகேயன், “அதுக்கும் எனக்கும் இந்த சம்மந்தமும் இல்லை சார், இயக்குனர் சிபி தான் என்னை நாசுக்காக மாட்டிவிட்டுள்ளார் என பதிலளித்தார். படத்தில் சிவா நான் அரசியில்வாதியாக ஆகிவிடாவா என தன நணபரிடம் கேட்க அதுற்கு அரசியலில் நிறைய பொய் பேசணும் என சிவாவின் நண்பர் கூற அப்போ அது வேண்டாம் என சிவா நக்கலாக கூறுவதை போல அந்த கட்சி அமைந்திருக்கும்.

நேற்று படத்தின் ட்ரையிலரும் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. கல்லூரி மாணவனாக தோன்றும் சிவா அணைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். சில வினாடிகள் ட்ரைலரில் பள்ளி மாணவனாகவும் தோன்றி பாராட்டுகளை பெற்று வருகிறார். படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா,சிவிங்கி என பலர் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Video courtesy – thi cinemas

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்