நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருனு தெரியுமா? அட இவரு இந்த சீரியல் நடிகரா?

பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா பார்த்திபனை பிரிந்த பின்னர் சீரியல் நடிகர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு இருந்தார். பின்னர் அவருடனும் வாழ பிடிக்காமல் அவரையும் பிரிந்து விட்டார். தற்போது சீதாவின் இரண்டாவது கணவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் ஆண்பாவம் என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை சீதா. பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று 100க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். 1985 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்த இவர் சில ஆண்டுகள் மட்டுமே நடித்தார். 1991 ஆம் ஆண்டு வரை நடித்த அவர் திரைத்துறைக்கு நீண்ட இடைவெளி விட்டார். பின்னர் 2002 ஆம் ஆண்டு மீண்டும் திரைத்துறைக்கு திரும்பினார். பல படங்களில் அவர் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருனு தெரியுமா? அட இவரு இந்த சீரியல் நடிகரா? 1

விளம்பரம்

குறிப்பாக வியாபாரி படத்தில் அவர் எஸ் ஜே சூர்யாவின் அம்மாவாக நடித்தார். இந்த படத்தில் வரும் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா என்ற பாடல் இன்றுவரை பலருக்கும் கேட்டால் கண்களில் கண்ணீர் வந்துவிடும். இதில் சீதாவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சீதாவும் பார்த்திபனும் புதிய பாதை என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. காதலிக்க தொடங்கிய அவர்கள் 1989ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர் பின்னர் 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2001 ஆம் ஆண்டு பிரிந்து விட்டதாக அறிவித்தனர். இருந்தபோதிலும் மகள்களின் திருமணத்தை இருவரும் ஒன்றாக சேர்ந்து நடத்தி வைத்து வருகின்றனர். பார்த்திபனை பிரிந்து பத்து ஆண்டுகள் கழித்து சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவரை சீதா மறுமணம் செய்து கொண்டார்.

தொடர்புடையவை  Jumpcuts Hari கதாநாயகனாக நடிக்கும் மிஸ்டர் ஹவுஸ்கீப்பர் படத்தின் டீசர் வெளியாகியது..!

நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருனு தெரியுமா? அட இவரு இந்த சீரியல் நடிகரா? 3

விளம்பரம்

சதீஷ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம் அத்திப்பூக்கள் போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். பின்னர் அவருடனும் வாழ பிடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் சீதா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று பேட்டி அளித்திருந்த சீதா, நான்தான் முதலில் காதலை சொன்னதாகவும் அவர் என்னை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும் தொடர்ந்து பேட்டிகளில் பார்த்திபன் பொய் சொல்லி வருகிறார். ஆனால் எனக்கு தினமும் போன் செய்து அவர்தான் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். அதன் பின்னர் தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது என்று சீதா பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது சீதாவின் இரண்டாவது கணவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த இவர் அடடே இவர்தான் சீதாவின் இரண்டாவது கணவராக இவ்வளவு நாள் தெரியாமல் போயிற்றே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்..!

நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருனு தெரியுமா? அட இவரு இந்த சீரியல் நடிகரா? 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment