Comment-ல் வன்மத்தை கொட்டுகிறார்கள்.! மனைவிக்காக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.!

நயன்தாரா நடித்து இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் தான் கனெக்ட். இந்த படத்திற்கு பலரும் நெகட்டிவ் ரிவியூக்களும் பேக் ரிவ்யூஸ்களும் கொடுத்து வரும் நிலையில், இந்த படத்தை தயாரித்த இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், இந்த திரைப்படம் பற்றி வன்மம் நிறைந்த ஃபேக் ரிவியூஸ் போடுகிறார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கு என்று சொல்ல முடியும்? இல்லை என்றால் நெகட்டிவ்வாகத்தான் சொல்ல முடியும். இதை போய் வன்மம் என்று சொல்கிறீர்களே என்று விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்து வருகின்றனர். நயன்தாரா நடிப்பில் இரண்டாவது முறையாக உருவாகி இருக்கும் பேய் படம் தான் கனெக்ட். இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவனின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.

Comment-ல் வன்மத்தை கொட்டுகிறார்கள்.! மனைவிக்காக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.! 1

விளம்பரம்

மற்ற எந்த படங்களின் பிரமோஷனுக்கும் வராத நயன்தாரா தனது கணவரின் தயாரிப்பு நிறுவனம் என்ற காரணத்தினாலேயே பிரமோஷன் செய்வதற்கு வந்திருந்தார் என்று நெட்டிசன்கள் தங்களது வேலையை காட்டத் தொடங்கினர். மேலும் அவர் கொடுத்த பேட்டிகளும் வைரல் ஆகியிருந்தது. பின்னர் கனெக்ட் படத்திற்காக எக்ஸ்க்ளூசிவாக பேட்டியும் அளித்தார் நயன்தாரா. மேலும் கனெக்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. நயன்தாராவிற்கு கடந்த சில படங்கள் எதுவும் வெற்றி படங்களாக அமையவில்லை. கனெக்ட் படத்துடன் வெளியான லத்தி படம் ட்ரெண்டான அளவிற்கு கூட இந்த கனெக்ட் படம் ட்ரெண்ட் ஆகவில்லை. ஆனால் படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே விமர்சனங்களை கூறினர். இந்தப் படத்திற்கு விக்னேஷ் சிவன் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை படம் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்புடையவை  காசு வாங்கிட்டு தானே நடிக்கிற? ஓசியில நடிக்கிறயா? யோகி பாபுவை கிழித்து தொங்க விட்ட தயாரிப்பாளர்கள்.!

Comment-ல் வன்மத்தை கொட்டுகிறார்கள்.! மனைவிக்காக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.! 3

விளம்பரம்

 

Comment-ல் வன்மத்தை கொட்டுகிறார்கள்.! மனைவிக்காக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.! 5

விளம்பரம்

இந்த நிலையில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கனெக்ட் திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்த ஒருவர் இந்த படம் மிகத் திரில்லிங்கான ஒரு பேய் படமாக வந்திருக்கிறது விக்னேஷ் சிவன் இந்த படத்தை தயாரித்ததற்கு நன்றி சோர்வடையாமல் முன்னேறிக்கொண்டே இருங்கள் என்று பகிர்ந்திருந்தார். இதை ஷேர் செய்த விக்னேஷ் இவன் உங்களுடைய நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி, வன்மங்கள் நிறைந்த இந்த பொய்யான ரிவியூகள் மற்றும் கமெண்ட்களில் இருந்து எங்களை காத்ததற்கு நன்றி என்று பதில் அளித்து இருக்கிறார். அதற்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் படம் சுமாராகத்தான் இருந்தது எல்லாரிடமிருந்தும் பாசிட்டிவ் விமர்சனத்தை நீங்கள் எதிர் பார்க்க முடியாது. உங்கள் படம் நல்லா இல்லை என்று சொன்னால் வன்மம்னு ஏன் இப்படி ஒப்பாரி வைக்கிறாய் என்று விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment