காசு வாங்கிட்டு தானே நடிக்கிற? ஓசியில நடிக்கிறயா? யோகி பாபுவை கிழித்து தொங்க விட்ட தயாரிப்பாளர்கள்.!

நடிகர் யோகி பாபுவை தயாரிப்பாளர்கள் பலர் இணைந்து காட்டமாக பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக தனது வாழ்க்கை ஆரம்பித்தவர் பாபு. அவர் முதன்முதலாக யோகி என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக யோகி பாபு என்று அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது யோகி பாபு அந்தகன், அயலான், சுந்தரா டிராவல்ஸ் 2, ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பூமர் அங்கிள் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இருந்தது. இந்த நிலையில் யோகி பாபு குறித்து தயாரிப்பாளர்கள் கடுமையாக பேசியிருக்கின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

காசு வாங்கிட்டு தானே நடிக்கிற? ஓசியில நடிக்கிறயா? யோகி பாபுவை கிழித்து தொங்க விட்ட தயாரிப்பாளர்கள்.! 1

விளம்பரம்

யோகி பாபு தாதா என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடன் சேர்ந்து நிதின் சத்யாவும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு யோகி பாபு இந்த படத்தில் நான் நான்கு சீன்கள் மட்டுமே நடித்திருக்கிறேன் தனது புகைப்படத்தை வைத்து இந்த தயாரிப்பாளர்கள் ஏமாற்றுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்து இருந்தார் யோகி பாபு. அவர் வெளியிட்டிருந்தாவது இந்த படத்துல நான் ஹீரோ இல்லை, நிதின் சத்யா தான் ஹீரோ. அவர் பிரண்டாக தான் நான் நடித்திருக்கிறேன். நான் ஹீரோ இல்ல மக்களே இதை நம்பாதீங்க என்று தாதா படத்தின் போஸ்டரையும் அவர் பகிர்ந்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியிருந்தது. யோகி பாபு இவ்வாறு சொன்னதால் இந்த படத்தை வாங்க யாருமே முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடையவை  வசூலில் தாறுமாறாக அடி வாங்கிய இந்தியன்2..! பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கே இந்த நிலைமையா..! முழு வசூல் விபரம் இதோ..!

காசு வாங்கிட்டு தானே நடிக்கிற? ஓசியில நடிக்கிறயா? யோகி பாபுவை கிழித்து தொங்க விட்ட தயாரிப்பாளர்கள்.! 3

விளம்பரம்

இந்த படத்தின் வியாபாரத்திற்கு யோகி பாபு போட்ட இந்த ட்வீட் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர்கள் நான்கு சீன்களில் மட்டுமே நடித்ததாக யோகிபாபு கூறுகிறார். நான்கு சீனோ, 40 சீனோ காசு வாங்கிட்டு தானே நடிச்ச? சும்மா நடிச்சு குடுத்தியா? என்று யோகி பாபுவை கடுமையாக சாடினர். மேலும் வடிவேலுக்கு கொடுத்தது போல யோகிபாபுவிற்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் பேசினர். அடுத்த படங்களிலும் நடிக்க தன்னிடம் காசு வாங்கியிருப்பதாகவும், அடுத்த படத்தில் நடித்து கொடுத்த பிறகு தான் அவர் மற்ற படங்களில் நடிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தாதா படத்தின் தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் கோரிக்கை வைத்திருக்கிறார். Watch the below Video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: ABP Live

விளம்பரம்

Leave a Comment