அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா ஒய்வு பெற்றார்!!

வெளியிட்டது
அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா ஒய்வு பெற்றார்!! 1

இன்டர்நெட் உலகில் எட்டாத புகழையும், சாதிக்க நினைக்கும் சதாரண மனிதன் மனதில் நம்பிக்கையையும் விதைத்த உலக புகழ் பெற்ற பணக்காரர்களில் ஒருவரான ஜாக்மா தனது அலிபாபா நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.1999ல் தனது நண்பர்களுடன் இணைந்து அலிபாபா என்ற மிகச் சிறிய வர்த்தக நிறுவனத்தை குறுகிய அறையில் உருவாக்கிய சீன நாட்டின் மனிதர் தான் ஜாக்மா. தற்போது இந்த அலிபாபா குழுமம் தான் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து அந்த சுற்றுசூழலில் வளர்ந்து வந்து, கஷ்டப்பட்டுப் படித்து ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர் ஜாக் மா. பின்னர் சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கில் கனவுடன் மொழி பெயர்ப்பு நிறுவனம் ஒன்றை சீனாவில் தொடங்கினார். அந்தத் தொழிலில் பெரும் தோல்வியைக் கண்ட பின்னர், ஐரோப்பிய நாடுகளில் ஆன்லைன் வர்த்தகத்தைப் பார்த்து 1999ஆம் ஆண்டில் சீன நகரமான ஹங்க்சோவில் அலிபாபா நிறுவனத்தை ஆரம்பித்தார்.சீனாவில் இணைய வளர்ச்சி இல்லாத நிலையில் இவரது அலிபாபா நிறுவனம் தனது பயணத்தைப் போராட்டங்களுக்கு மத்தியில்தான் தொடங்கியது. போராட்டத்தைப் பார்த்துத் துவண்டு போகாமல் ஈபே போன்ற பெரிய நிறுவனங்களை முட்டி மோதி வென்றது அலிபாபா குழுமம். பலகட்ட போராட்டங்களின் மத்தியில் வளர்ச்சியடைந்து பின்னர் ஜாக்மா சீனாவின் முதல் நிலைப் பணக்காரர் ஆனார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் போர்ப்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 21ஆம் இடத்தை ஜாக் மா பெற்றார். அதே 2018ஆம் ஆண்டில் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார் ஜாக்மா. அப்போது சொன்ன சொல்லைத்தான் நேற்று ஜாக் மா காப்பாற்றினார்.தனது 55ஆவது பிறந்த நாளன நேற்று , 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தொழில் தொடங்கப்பட்ட சீன நகரமான ஹங்க்சோவில் உள்ள ஒரு பெரிய விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் முழுவதுமாக பதவி விலகினார் ஜாக் மா. இனி அலிபாபா குழும தலைவராக ஜாக் மாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட டேனியல் ஜாங்க் பதவி வகிப்பார் என்று அறிவித்தார்.

ஜாக் மா ஒரு சிறந்த பேச்சாளர், நல்ல வழிகாட்டி, ஆடல், பாடல், இசை, தற்காப்புக் கலைகள் என அனைத்திலும் ஆர்வம் கொண்டவர். இவரது பேச்சை மட்டுமல்ல, முகத்தைப் பார்த்தாலே நல்ல தெளிவு பிறக்கும்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்