Categories: அரசியல்

ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்த வைகோ!

காஷ்மீர் விவகாரத்தில் விட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஜம்மு அண்ட் காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி ஆட்கொணர்வு மனுவை உச்சநீதி இன்று (செப்.11) வைகோ தாக்கல் செய்தார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்து, காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதன் பொருட்டு பிரச்சனை எழாத வண்ணம் அங்குள்ள முக்கிய தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மத்திய அரசு வீட்டு காவலில் சிறைபிடித்து வைத்திருக்கிறது.

வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் திமுக நிறுவனர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்து கொள்வதற்கு பரூக் அப்துல்லாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இருக்கும் சூழலில் அவரை தொடர்புகொள்ள முடியாமல் மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ திணறி வருகிறார்.

விழாவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், வைகோ தரப்பிலிருந்து இன்று (செப்டம்பர் 11) ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று உள் துறை அமைச்சர் சொன்னாலும் கூட அவரை எங்களால் இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்ற கேள்வியும் எங்களுக்குள் எழுந்துள்ளது. எனவே பரூக் அப்துல்லாவை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்