Categories: அரசியல்

“இந்தியாவிற்குச் சொந்தமான நதி நீர் பாகிஸ்தானுக்கு செல்லாது!” – பிரதமர் மோடி.

வெளியிட்டது
"இந்தியாவிற்குச் சொந்தமான நதி நீர் பாகிஸ்தானுக்கு செல்லாது!" - பிரதமர் மோடி. 1

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஹரியானாவில் சார்க்கி தாத்ரியில் நடந்த தேர்தல் பேரணியில் நம் நாட்டின் விவசாயிகளுக்குச் சொந்தமான நதி நீர் இனி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாது என்று கூறினார்.

இந்தியாவிற்குச் சொந்தமான நதி நீர்நிலைகள் பாகிஸ்தானுக்கு 70 ஆண்டுகளாக பாய்கிறது. இனி ஒரு துளி நீர் கூட பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாதவாறு செய்யப்போவதாகவும் அதற்கான வேலைகளும் ஆரமித்துவிட்டதாகவும் தனது உரையில் கூறியிருந்தார். பிரதமர் மோடி அவர்கள்

“கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்கு மற்றும் ஹரியானாவின் விவசாயிகளுக்குச் சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கிறது. மோடி அதைத் தடுத்து உங்கள் வீடுகளுக்கு கொண்டு வருவார். இந்த நீர் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் நாட்டின் விவசாயிகளுக்கு சொந்தமானது, நாங்கள் அதைப் பெறுவோம். இதை உணர்ந்து கொள்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, அதற்காக நான் கடமைப்பட்டுள்ளேன். மோடி உங்களுக்காகப் போரில் போராடுவார்”

என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் சீன அதிபர் தங்கல் படத்தைப் பார்த்ததாகவும் இந்திய மகளிரின் பெருமையைச் சிறப்பாக காட்டியுள்ளதாகவும் கூறியதாக பிரதமர் மோடி கூறியிருப்பதார். பின்பு இந்த முறை இரட்டை தீபாவளியாக இருக்கும். ஒன்று ‘தியா’ [மண் விளக்கு] தீபாவளி, மற்றொன்று ‘கமல்’ [தாமரை] தீபாவளி. இந்த தீபாவளியை மகள்களுக்கு அர்ப்பணிக்க அனுமதிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், ” என்றும் கூறியுள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்