உலகத்தில் ஆண்டுதோறும் காசநோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை. மேலும் ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வழக்குகளில் சுமார் 27 சதவிகிதம் இந்தியாவில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலக்கத்தில் இந்தியாவில் தான் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகம் உள்ளதாக டபிள்யூ. எச். ஓ கூறுகிறது. அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 9 சதவிகிதமும், இந்தோனேஷியாவில் 8%, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் 6% , நைஜிரியா மற்றும் வங்காளதேசத்தில் 4% மற்றும் தென்னாப்பிரிக்கவில் 3 சதவிகிதம் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ளனர். இந்த எட்டு நாடுகளும் உலகில் மூன்றில் இரண்டு பங்கு காசநோய் நோயாளிகளைக் கொண்டுள்ளது. 27 சதவீதத்தில், இந்தியாவில் அதிக மருந்து எதிர்ப்பு காசநோய் பாதிப்புகள் உள்ளன மற்றும் சீனா 14 சதவீதமும், ரஷ்யா 9 சதவீதமும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

காசநோய் பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். உலகெங்கும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் பத்து நோய்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.