இந்தியா – தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி!!

வெளியிட்டது
இந்தியா - தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி!! 1

தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்று டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரையும் கைப்பற்றி இந்தியா அபாரமான வெற்றியைப் பெற்றது.

இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. இதில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வென்று இந்தியா 3—0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியு முதலில் பேட் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 492 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோஹித் ஷர்மா இரட்டை சதமும் அஜங்கிய ரஹானே சதமும் எடுத்திருந்தனர். அடுத்து வந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய பவுளர்களின் பந்துவீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுடன் வெளியேறியது.

ஆனால் 355 ரன்களுடன் பின்தங்கி இருந்தால் பாலோ-ஆன் மூலம் மீீீீண்டும் இரண்டாவது இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்தது. அதிலும் பேட்ஸமேன்கள் இந்திய பவுளர்களை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். தியூனிஸ் டி ப்ரூயின், டேன் பைட், லிண்டே போன்ற பின்வரிசை வீரர்கள் மட்டுமே ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். மூன்றாவது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தனர்.

நாளாவது நாளான இன்று ஆட்டம் துவங்கியதும் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியினர் மீதமுள்ள இரண்டு விக்கெட்களையும் இழந்து 133 ரன்களுடன் ஆட்டம் இழந்தனர். முகமது ஷாமி 3 விக்கெட்கள் மற்றும் உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்து இந்தியாவை வெற்றி பெற செய்தனர். ஆதலுல் இந்திய அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்று தொடரையும் கைப்பற்றியது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்