Categories: அரசியல்

இந்தியை விமர்ச்சித்த கமல்

“மற்ற மொழி குடும்பங்களை விட இந்தி சிறு வயதுடையது எனவும், டயப்பர் அணிந்து இருக்கும் சிறு குழந்தை தான் இந்தி” எனவும் மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல் இன்று (அக்.4) விமர்ச்சித்துளார்.

சமீப காலமாக இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இக்கருத்துக்கு ஒத்தவாறு மத்திய அமைச்சர் அமித் ஷா, செப்டம்பர் 14ஆம் தேதி, இந்தி தினம் கொண்டாடப்பட்ட போது, “நாட்டை ஒன்றிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தியை விமர்ச்சித்த கமல் 1
கமல்

இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இந்தி மொழி எதிர்ப்பு உணர்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதுதொடர்பாக, தேசிய மொழி தொடர்பாக வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்த கமல், அதில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இப்பிரச்சனை எழுச்சியை காணும் என்று குறிப்பிருந்தார். அதே போல் இன்று மீண்டும் இந்தியை விமர்சித்துள்ளார்.

“தமிழ், சஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளோடு இந்தியை ஒப்பிடும் போது, இந்தி சிறு வயதுடையது தான். இதனை நான் கேலி செய்வதற்காக சொல்லவில்லை. நம் மொழியை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் மற்றவர்கள் மீது திணிக்கவோ, மற்ற மொழியின் கழுத்தை நெறிக்கவோ கூடாது என்பதற்காக சொல்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்