
கோவாவில் நடைபெறவுள்ள 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” மற்றும் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” ஆகிய இரண்டு தமிழ் படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய பனோரமாவின் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஒத்த செருப்பு சைஸ் 7 படம் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பாத்திரத்தை மட்டுமே கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பார்த்திபன் அவர்களால் நடித்தது, மேலும் சமீபத்தில் விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றது. ஒரு நபர் மட்டுமே எழுதுதல், இயக்குதல், தனி நடிப்பு கொண்டு இத்திரைப்படத்தை தயாரித்ததற்காக இந்த படம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நுழைந்தது. இந்த படம் சிங்கப்பூர் தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இயக்குனர் பார்த்திபன் அவர்கள்
“ஓஎஸ்7 இந்திய தாய் உச்சி முகர்ந்த ஒரு மழலை என் ஒத்த செருப்பு. இந்திய பனோமாவின் தலைவர் மற்றும் ஜூரிகளுக்கு நன்றி. கோவா-வில் கோலகலமகா கொண்டாட போகும் இப்பாத்திரத்திற்கு நம்மூரில் கை தட்டுவதே ஆனந்த பெருக்கு. ரசனை மிகுந்த ராசிகர்களுக்கும் பாராட்டுக்குரிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் நன்றி”
என்று கூறியுள்ளார். இயக்குனர் லட்சுமி நாராயணனின் “ஹவுஸ் ஓனர்” படம் இந்த ஆண்டு முற்பகுதியில் வெளியானது. இதில் கிஷோர், ஸ்ரீரஞ்சினி, பசங்க கிஷோர், லவ்லின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லட்சுமி நாராயணன் அவர்களும் இந்திய பனோமாவின் தலைவர் மற்றும் ஜூரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டதற்கு ‘ஹவுஸ் ஓனர்’ நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்தார்.