சூப்பர் சிங்கர் ப்ரியங்கா குரலில் பிசாசு 2 படத்தின் ‘நெஞ்சே கேளு’ என்ற பாடல் வெளியானது..!

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திகில் படமான பிசாசு 2 படத்தில் இருந்து தற்போது ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது. மிஷ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிஷ்கின் எப்போதும் வித்தியாசமான கதையே தேர்ந்தெடுத்து இயக்குவார். கடைசியாக இவர் இயக்கிய சைக்கோ படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் 2014ம் ஆண்டு பிசாசு படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்ததால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பல முண்ணனி நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது பிசாசு 2 திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான ‘நெஞ்சே கேளு’ என்ற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் ப்ரியங்கா குரலில் பிசாசு 2 படத்தின் 'நெஞ்சே கேளு' என்ற பாடல் வெளியானது..! 1

விளம்பரம்

இயக்குனர் மிஷ்கின் சைக்கோ படத்திற்கு பின்பு பிசாசு 2 படத்தை இயக்கி வந்தார். இந்த படம் தற்போது நிறைவு பெற்று இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆனால் தற்போது தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கி இருக்கின்றனர். இதனால் அதிருப்தியில் இருந்த பட குழு சில காட்சிகளை நீக்கி விட்டு யு/ஏ சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே இந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதே சமயம் படத்தை பிரமோஷன் செய்யும் வேலைகளிலும் படக்குழு இறங்கி இருக்கிறது.

தொடர்புடையவை  தரை துடைக்கும் மாப் குச்சியில் தேசிய கொடியை காட்டினாரா சூரி? சூரியை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்

சூப்பர் சிங்கர் ப்ரியங்கா குரலில் பிசாசு 2 படத்தின் 'நெஞ்சே கேளு' என்ற பாடல் வெளியானது..! 3

விளம்பரம்

ஏற்கனவே கார்த்திக் ராஜா இசையமைப்பில் உருவாகி இருந்த ‘உச்சந்தல ரேகையில’ என்ற முதல் பாடலை வெளியிட்டிருந்தனர். தற்போது நெஞ்சை கேளு என்ற இரண்டாவது பாடலும் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியிருக்கிறார். மனதை வருடும் அந்த பாடலை நீங்களும் காண.. Watch the video below…

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment