ஏன்டா மனசாட்சி இல்லையாடா உங்களுக்கு? லைகர் படத்தை திட்டி தீர்த்த ப்ளூ சட்டை

நேற்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் ஒரு படம் தான் லைகர். லயன் + டைகர் அதாவது சிங்கத்துக்கும், புலிக்கும் பிறந்தவர் ஹீரோ என்பதால் படத்திற்கு லைகர் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த லாஜிக் எல்லாம் யோசித்த படக்குழு கதையும், திரைக்கதையும் கோட்டை விட்டுள்ளனர் படக்குழு. விஜய் தேவார கொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்த படத்தை பூரி ஜெகநாத் இயக்கி இருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்திற்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. படத்திலிருந்து பாதியிலேயே பலரும் எழுந்து செல்ல ஆரம்பித்து விட்டனர். தற்போது ப்ளூ சட்டை மாறனும் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஏன்டா மனசாட்சி இல்லையாடா உங்களுக்கு? லைகர் படத்தை திட்டி தீர்த்த ப்ளூ சட்டை 1

விளம்பரம்

மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராக இருக்கும் ஒருவர் அந்த விளையாட்டு வளையத்திலேயே இறந்து விடுகிறார். அதனால் தனது மகனை மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரராக மாற்ற போராடுகிறார் தாய் ரம்யா கிருஷ்ணன். அந்த மகன் தான் விஜய் தேவாராகொண்டா. தன் கணவர் பெற முடியாத பட்டத்தை மகன் பெற வேண்டும் என நினைக்கிறார் அந்த தாய். அதற்காக மிகப்பெரிய கோச் ஒருவரிடம் சேர்த்து விடுகிறார். ஆரம்பத்தில் தயங்கிய கோச் பின்னர் இவரை சேர்த்துக் கொள்கிறார். கோச் விஜய் தேவாலாகொண்டாவிடம் சில கோரிக்கைளை வைக்கிறார். அதில் குறிப்பாக காதலில் விழக்கூடாது என்று சொல்கிறார். ஆனால் முதல் வேலையாக அனன்யா பாண்டேவிடம் காதலில் விழுகிறார். படத்தின் இடைவேளை வரை காதல் காட்சிகள் மட்டுமே காட்டப்படுகிறது.

தொடர்புடையவை  "பாகுபலிக்கு முன் இது ஒரு குப்பை படம்.....தமிழர்களின் பெருமையை கொச்சைப்படுத்தும் தெலுங்கு ரசிகர்கள்"!!

ஏன்டா மனசாட்சி இல்லையாடா உங்களுக்கு? லைகர் படத்தை திட்டி தீர்த்த ப்ளூ சட்டை 3

விளம்பரம்

பின்னர் அந்த கதாநாயகி ஹீரோவுக்கு திக்கு வாய் என்பதால் பிடிக்கவில்லை என்று பிரிந்து சென்று விடுகிறார். பின்னர் அமெரிக்காவில் பெரிய ரவுடியாக இருக்கும் மைக் டைசன் ஹீரோயின் அப்பாவுக்கு கந்து வட்டி கொடுத்த பிரச்சினையால் ஹீரோயினை கடத்தி சென்று விடுவார். இதனால் ஹீரோ போய் மைக் டைசனை அடித்து போட்டுவிட்டு ஹீரோயினை காப்பாற்றுவது தான் படத்தின் கதை. இந்த படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை தனது விமர்சனங்களை வைத்துள்ளார். வழக்கம் போல அவர் இந்த படத்தை கழுவி ஊற்றி இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Talikes

விளம்பரம்

Leave a Comment