உலகில் ஒரு இனத்தையோ அல்லது ஒரு மதத்தையோ இனப்படுகொலை செய்ய வேண்டுமென்றால் 10 படிகள் கொண்ட வழிமுறைகள் இருப்பதாக இனப்படுகொலை குறித்தான ஆய்வாளர்கள் கூறுகின்றன. இந்த 10 படிகளைளையும் ஒரு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் போது, ஒரு இனத்தின், மதத்தின் மீத வாழ்க்கை கேள்விக்குறியாகி போகிறது. ஹிட்லரின் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலை திட்டம், ராஜபக்சேவின் ஈழ தமிழர்களுக்கு எதிரான செயல்முறைகள் போன்றவை இந்த 10 படிகளுக்குள் அடக்கிவிடலாம்.
ஆனால் தற்போது இதனை இந்தியாவின் காஷ்மீர் மற்றும் ஆஸாமில் உள்ள நடைமுறைகளையும் இந்த படிகளுக்குள் பொருத்தி பார்த்தோமேயானால், இங்கு நடந்துகொண்டிருப்பது இனப்படுகொலை என்பது தெள்ள தெளிவாக காட்சி தருகிறது.
தற்போது அந்தப் படிநிலைகளை குறித்தான தெளிவினை நாம் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
வகைப்படுத்துதல்: இனம், மதம், கலாச்சாரம் மற்றும் நாட்டுரிமை ஆகியவற்றைக் கொண்டு மக்களை “நாங்கள் மற்றும் நீங்கள்” என பிரிப்பது. எடுத்துக்காட்டாக ஜெர்மானியர்கள் மற்றும் யூதர்கள்; சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள்; ஹுட்டு மற்றும் துட்ஸி; ருவாண்டா மற்றும் புருண்டி; இது போன்ற வகைப்படுத்தல்கள் இனப்படுகொலையின் முதல் படிநிலை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இனத்தொகையை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான நிறுவனங்களை கட்டமைக்க தொடங்குவர். பொது மொழியை முன்னிறுத்துவதும், தனித்த ஒரே தேசிய அடையாளத்தை உருவாக்க சமூகத்தை உருவாக்குவார்கள்.
அடையாளப்படுத்துதல்: மதம், இனம், மொழி சார்ந்த அடையாளத்தை உருவாக்கப்படுவது. குறிப்பிட்ட இன மக்களுக்கு பொதுவான ஆடை, நிறம் அல்லது பெயர்களைக் கொண்டு அடையாளப்படுத்துவது. ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது, அவர்களை தனித்த அடையாளப்படுத்த மஞ்சள் நிற நட்சத்திரமும், கெமர் ரூஜ் கம்போடியாவில் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு நீல தாவணியும் அணிந்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்.
பாகுபாடு: ஒரு நிலத்தில் உள்ள ஆதிக்க இனம் தனது விருப்பத்தை சட்டத்தின் மூலமும், அதற்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிறுபான்மை இனத்தின் உரிமைகளை பறிக்கும் வேலையில் தீவிரமாக செயல்படும். ஒடுக்கப்படும் இனத்தின் குடியுரிமை மற்றும் மனித உரிமை ஆகியவை பறிக்கப்படும். 1935ஆம் ஆண்டு யூதர்களுக்கான குடியுரிமையை ஜெர்மனிய அரசு ரத்து செய்தது. அதன் பின் தொடர்ச்சியாக வேளைகளில் இருந்து நீக்கப்பட்டனர். தங்களது உரிமைகளை படிப்படியாக இழந்து இனப்படுகொலைக்கு ஆளாகினர்.
மனிதாபிமானம் இல்லாதது: ஒரு ஆதிக்க குழு மற்றோரு சிறுபான்மை குழுக்களை மனிதநேயம் தன்மையற்று நடத்துவார்கள். அவர்களை பொறுத்தவரை சிறுபான்மை குழுக்கள் விலங்கு, பூச்சி மற்றும் நோய்களுக்கு சமமானவர்களாக கருத்தப்படுவார்கள். இத்தகைய பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்பு தாங்கிய பிரச்சாரங்கள் வெகுவாக பரப்பப்படும். இதன் மூலம் இனப்படுகொலைக்கான ஆதரவு தளத்தை சமூகத்தில் உருவாக்கப்படும்.
அமைப்பு: என்றுமே இனப்படுகொலையை ஒழுங்குபடுத்த அமைப்பு ஒன்று தேவைப்படும். பொதுவாக இனப்படுகொலைக்கு இராணுவத்தை பயன்படுத்துவதைவிட உள்ளூரில் ஆதிக்கம் உள்ள அமைப்புகளை பயன்படுத்துவது. அதாவது இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயங்குவது போல. உள்ளூர் அமைப்புகள் தான் இனப்படுகொலைக்களுக்கான கொலைகளுக்கு திட்டங்களை வகுக்கும்.
துருவப்படுத்துதல்: வெறுப்புகளை பலப்படுத்தும் பிரச்சாரங்கள் வெகுவாக பரப்பப்பட்டு, கலப்பு திருமணங்கள், சமூக தொடர்புகள் துண்டிக்க சட்டங்கள் நிறைவேற்றப்படும். துருவப்படுத்தப்படும் பிரச்சாரங்கள் முதலில் சொந்த குழுவில் உள்ள மிதவாதிகளை தான் குறிவைக்கும். அதன் பின்னரே மற்ற குழுக்களை தாக்க ஆரம்பிக்கும். அதாவது ஜனநாயகவாதிகள் அனைவரும் கொலை செய்யப்படுவர். இந்தியாவில் அதன் முன்னோடி திட்டமானது மகாத்மா காந்தியை கொலை செய்தது தான்.
தயாராகுத்தல்: இது தான் முக்கியமான கட்டம். சிறுபான்மை இனத்திற்கு எதிராக இனப்படுகொலைக்கு திட்டங்கள் தீட்டப்படும். அதற்கு இனத்தை தூய்மையக்குத்தல் என்று பெயரிடுவர். இந்த படிநிலையில் தான், ஆதிக்க குழுவினர் படைகளை உருவாக்குவது மற்றும் ஆயுதங்கள் வாங்குவது, போராளிகளுக்கு பயிற்சி வழங்குவது போன்ற செயல்கள் நடந்தேரும்.
செயல்திட்டங்கள்: மதம், இனம் சார்ந்த அடையாளங்களை அடிப்படையாக கொண்டு மக்கள் பிரிக்கப்படுவார்கள். சிறுபான்மை இனத்தவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். மக்கள் அடையாள காணப்பட்டு வறட்சி மிகுந்த பகுதிகளில் அடைக்கப்பட்டு, பட்டினியிடப்படுவார்கள். சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் ஆதிக்க இனதவரின் குடியேற்றம் அதிகளவில் இருக்கும். பின்னர் அவசரநிலை அறிவிக்கப்படும்.
அழிவின் தொடக்கம்: வெகுஜன கொலையின் தொடக்க படிநிலை ஆகும். ஆதிக்க குழுக்களை பொருத்த வரையில் இன தூய்மை நடந்தேறும். இது வரலாற்று ரீதியிலான பழிவாங்களை அழித்தொழிப்பின் மூலம் நிறைவேற்ற முனைப்புடன் செயல்படும். அதற்கு பலவிதமான கற்பனை வாதங்களை அழித்தொழிப்புவாதிகள் முன்வைப்பார்கள்.
இறுதிகட்டம்: இது தான் இனப்படுகொலைக்கான கடைசி படிநிலை. கொல்லப்பட்ட உடல்களை குழிகளை தோண்டி புதைப்பார்கள் அல்லது எரித்துவிடுவர்கள். குற்றங்களை மறைக்கவும், சாட்சிகளை மறைக்கவும் அதி தீவிரமாக செயல்படுவார்கள்.
இந்தப் பத்து படிநிலைகளும் தற்போதைய சூழலில் பொருத்திப் பார்ப்போமேயானால் அன்று ஜெர்மனி முதல் சமீபத்திய இலங்கை வரையிலும் நீடித்து தற்போது இந்தியாவிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கிறது.
Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை