இரத்த சோகை நோயாளிகள் டெங்கு வைரஸைப் பரப்ப அதிக வாய்ப்புள்ளது– ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

வெளியிட்டது
இரத்த சோகை நோயாளிகள் டெங்கு வைரஸைப் பரப்ப அதிக வாய்ப்புள்ளது– ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு! 1

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும் மனிதர்கள் டெங்கு காய்ச்சலைப் பரப்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நோயின் போது இரும்புச் சத்துக்களை உட்கொள்ளும் நோயாளிகள் கொசுக்களால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம் என்றும் இரத்தத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ள டெங்கு நோயாளிகளுக்கு, வைரஸால் இரத்தத்தை ஈர்க்கும் கொசுக்கள் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் நேச்சர் மைக்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டெங்கு காய்ச்சல் முக்கியமாக ஏடிஸ் எகிப்தி கொசுக்களால் பரவுகிறது. இது காய்ச்சல், தடிப்புகள் மற்றும் பயங்கர வலிகளை ஏற்படுத்துகிறது. மேலும் அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கும் வழிவகுக்கும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 390 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஆய்வாளர்கள் இதன் தாக்கத்தை அறிந்து கொள்ள ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதாவது அவர்கள் ஆரோக்கியமான மனித தன்னார்வலர்களிடமிருந்து இரத்தத்தை சேகரித்து ஒவ்வொரு மாதிரியிலும் டெங்கு வைரஸைச் சேர்த்தனர். அவர்கள் கொசுக்களுக்கு அந்த இரத்தத்தை அளித்தபோது, ​​எத்தனை கொசுக்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை சோதித்தபோது, ​​அதில் நிறைய வேறுபாடுகளைக் கண்டனர்.

“இரத்தத்தில் அதிக இரும்புச்சத்து இருப்பதால், குறைவான கொசுக்கள் பாதிக்கப்பட்டன”

என்று ஆய்வு காட்டுகிறது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்