காஷ்மீரில் தகவல் தொடர்பு தடைகள் ஏற்படுத்தும் மனநல சவால்கள்! குறுந்தொடர் 1

எங்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகிறது, எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவே வெறுப்படைகிறேன்” என்கிறார் 24 வயதான சஹ்ரா.

சஹ்ரா ஒரு சட்ட பட்டதாரியாவார். அவர் இப்போது மாநில சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஆனால், தற்போது இவர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி. மத்திய அரசு காஷ்மீருக்கான 370வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்டுள்ள பதற்றம் நீங்கும் வரை அவருக்கு மருந்துகள் தேவைப்படாது என்றும், தன்னால் இனி என் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என தனது ஆதங்கத்தை தெரிவிக்கிறார்.

விளம்பரம்

ஸ்ரீநகரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள பாரமுல்லா நகரில் உள்ள கிளினிக்கில் நரம்பியல் மருத்துவரான ஆகாஷ் யூசுப் கானிடம் மருத்துவ சிகிச்சை பெற காத்திருந்த 15 நோயாளிகளில் சஹ்ராவும் ஒருவர். மோசமாக பராமரிக்கப்படும் நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும். மற்ற நாட்களில், ஆகாஷ் யூசுப் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்.

காஷ்மீரில் தகவல் தொடர்பு தடைகள் ஏற்படுத்தும் மனநல சவால்கள்! குறுந்தொடர் 1 1

370 வது பிரிவு நீக்கப்பட்டதன் விளைவாகவும், அதனுடன் இணைந்து தகவல்தொடர்பு துண்டித்தலின் விளைவாகவும், பலர் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கோ அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லவோ முடியாமல் போகும் என்ற அச்சத்தின் காரணமாக, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகிய மன நோய்களுக்கு ஆளாகின்றன. இதன் எண்ணிக்கை சில நாட்களில் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கணிகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

காஷ்மீரின் நிகழும் ஆபாய நிலையால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மனநல மருத்துவமனையை அணுகிய மக்களின் எண்ணிக்கை பலமடங்கு குறைந்துள்ளது. மேலும், மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (டாக்டர்ஸ் விதோட் பார்டர்ஸ்) போன்ற அமைப்புகள் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட காரணத்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நான்கு மாவட்டங்களில் தங்களின் மனநல சுகாதார சேவை மையங்களை முடக்கியுள்ளன.

தொடர் கலவரம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மாநிலம், வரலாற்று ரீதியாகவே மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களில் சுமார் 18 இலட்சம் இளைஞர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், அதாவது மக்கள் தொகையில் 45% பேர் மன உளைச்சலின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என 2015 ஆம் ஆண்டு மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கணக்கெடுப்பில் 41% மக்கள் மனச்சோர்வின் அறிகுறிகளையும், 26% பேர் பதட்டத்தின் அறிகுறிகளையும், 19% பேர் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் சீர்குலைவின் அறிகுறிகளையும் சுட்டி காட்டியுள்ளனர்.

தொடர்புடையவை  ஜம்மூ காஷ்மீரில் பனி சரிவு

தற்போது ஏற்பட்டுள்ள கவனச்சிதறல் மற்றும் பொழுதுபோக்கு இன்மையால் ​​தங்களது வேலையை மீண்டும் தொடங்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள். காஷ்மீர் மக்கள் உள்நாட்டு வேலைநிறுத்தத்தையும், கடைகள் மற்றும் வணிகங்களை மூடுவதை பற்றியும் பொருட்படுத்தவில்லை. ஆனால் அடுத்த நிகழ இருக்கும் நிச்சயமற்ற தன்மையை பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளதாகவும், இந்நிகழ்வை தொடர்ந்து தாங்கள் காயப்படுவதையும், அவமானப்படுவதையும் உணர்ந்ததாகக் கூறினர். மேலும், அவர்களின் அடையாள உணர்வு பறிக்கப்பட்டுள்ளதாக தெரித்துள்ளனர்.

விளம்பரம்

உச்ச மோதல்களின் நடைபெற்று வந்த காலத்தில் கூட, ஜம்மு-காஷ்மீரில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இது 18 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் வேலையற்றோர் 22.4 சதவிகிதமாக ஆக இருந்தது. இந்த வயதினருக்கான இந்திய சராசரியில் 13.2 சதவிகிதமாக இருந்தது. இது நாட்டின் மொத்த விகிதத்தை விட இரு மடங்காகும் என 2016 பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், சுகாதார வசதிகளை அணுகுவதில் மக்கள் சிக்கலை சந்திக்கின்றனர். மேலும், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக செப்டம்பர் 6ஆம் தேதி அன்று இந்தியாஸ்பென்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. பதற்றத்திற்கு அப்பாற்பட்ட சாதாரண சூழ்நிலையில் கூட, சிலர் மனநல சுகாதாரத்தை அணுகுகிறார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  சாதி வாரி கணக்கெடுப்பு: ராமதாஸ் தலைமையில் போராட்டம்
காஷ்மீரில் தகவல் தொடர்பு தடைகள் ஏற்படுத்தும் மனநல சவால்கள்! குறுந்தொடர் 1 3

ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் ஸ்ரீநகரில் இயங்கும் மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மருத்துவமனையை சுமார் 44.5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே அணுகியுள்ளனர். அதே வேளையில் மே மாதத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவானதாக பதிவாகியுள்ளது.

அதேபோல கடந்த சில வாரங்களில், அதாவது ஆகஸ்ட் 5 முதல் அதிகமான மக்கள் பதட்டம் மற்றும் படபடப்பு அறிகுறிகளுடன் வெளி நோயாளி மருத்துவ பிரிவுக்கு வருகை தருகின்றார்கள். பரமுல்லா மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் பொது மருத்துவர் ஒரு அளித்துள்ள பேட்டியில், பெரும்பாலான மக்கள் வெளி நோயாளி பிரிவிற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். தற்போது, மன சோர்வு மற்றும் பதட்ட ஆகியவற்றிற்கான மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது, குறிப்பாக 16-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு இத்தேவை அதிகமுள்ளதாக தெரிவிதுள்ளார். (தொடரும்…)

தமிழில் தமிழ்முரசு
நன்றி India Spend

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment