சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை!!

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை!! 1

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்தது வருகிறது. தமிழகம் மற்றும் மேலும் 4 மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், மழைக்கு காரணம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எனவும் கூறியுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.

சென்னையில், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர், நங்கநல்லூர் ஆகிய இடங்களிலும், சென்னையின் புறநகரில் மழை கொட்டி தீர்த்தது.

விளம்பரம்

மழையின் அளவு நேற்று திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., மழை பதிவானது. பூண்டி 20 செ.மீ., திருத்தணி, தாமரைப்பாக்கம் தலா 15 செ.மீ., சோழவரத்தில் 13 செ.மீ., திருவலங்காடு 12 செ.மீ பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிபூண்டியில் தலா 10 செ.மீ., மழை பதிவாகியது. அயனாவரத்தில் 9.6 செ.மீ., பெரம்பூரில் 8.8 செ.மீ., அம்பத்தூரில் 8.5 செ.மீ., புரசைவாக்கத்தில் 7.8 செ.மீ., மாம்பலமத்தில் 7.8 செ.மீ., எழும்பூரில் 7.4 செ.மீ., மயிலாப்பூரில் 7 செ.மீ., தண்டையார்ப்பேட்டையில் 6.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  கள்ளக்குறிச்சியில் விபத்து! இரண்டு பேருந்துகள் மோதல்!!

விளம்பரம்

Leave a Comment