சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை 1

சென்னையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காலை முதலே மழை பொழிவு இருந்தது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல், புரசைவாக்கம் மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

நங்கநல்லூர், அரும்பாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, சூளைமேடு, எம்.எம்.டி.ஏ. ஆகிய இடங்களில் காலை முதல் மழை பெய்து வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment