கலை சேவையை பாராட்டி கமலுக்கு டாக்டர் பட்டம்! ஒடிசா முதல்வர் வாழ்த்து!!

கலை சேவையை பாராட்டி கமலுக்கு டாக்டர் பட்டம்! ஒடிசா முதல்வர் வாழ்த்து!! 1

கலை சேவையை பாராட்டும் வகையில் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கியுள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தின் சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமாக விளங்கும் கமல்ஹாசன் அவர்களின் கலை சேவையைப் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது, இவ்விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனுக்கு, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘உங்களுடைய சிறந்த விருந்தோம்பலுக்கும், அன்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விளம்பரம்

ஒடிசா மாநிலத்தின் தற்போதைய வருகை மற்றும் நம்மிடையேயான உரையாடலை எப்போதும் போற்றுவேன். உங்களிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. அதை, என்னுடைய தமிழகத்தில் நிறைவேற்ற முற்படுவேன். ஒடிசா உங்களுடைய கையில் புதையலைப் போல உள்ளது. என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment