Categories: உலகம்

ஈரான்தான் சுவூதியின் அரம்கோ எண்ணெய் ஆலைகளைத் தாக்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு.

வெளியிட்டது
ஈரான்தான் சுவூதியின் அரம்கோ எண்ணெய் ஆலைகளைத் தாக்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு. 1

சவூதி அரேபியாவில் உள்ள அரம்கோ வின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை ஈரான் நாடு தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் ஈரான் நாடு மறுத்துள்ளது.

அப்காய்க் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல் மீதும் தாாக்குதல் நடத்தப்பட்டதால் தீப்பிடித்து எரிந்தது.

தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சவூதி உள்நாட்டு அமைச்சர் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஆலைகளில் நடைபெறும் சுத்திகரிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆதலால் சுத்திகரிப்பு பணி மீண்டும் தொடங்க பல வாரங்களாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறதால் 5.7 மில்லியன் கச்சா எண்ணெய் பேரல் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு யேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹெளதி கிளர்ச்சிப் படையினர் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்தனர். ஆனால் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இத்தாக்குதலை ஈரான் செய்ததாகவும் ஹெளதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதலை நடத்தியதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு ஷியா தீவிரவாதிகளும் ஒரு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர். எனினும் தங்கள் நாட்டின் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. இதனிடையே சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்