Categories: அரசியல்

உடைக்கப்பட்ட சிலை

வெளியிட்டது
உடைக்கப்பட்ட சிலை 1

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையின் தலை உடைக்கப்பட்டு கலவரம் வெடித்தது இந்த கலவரத்தில் பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர், இதற்கு காரணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பட்டியல் சமுகத்தினரின் திருமணத்தில் தென் சமுகத்தின் தலைவர் கலந்துக்கொண்டர் அப்போது போக்குவரத்தில் இரு சமுகத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் கலவரம் உருவானது என கூறப்படுகிறது. இந்த கலவரத்தில் அம்பேத்கர் சிலையின் தலை இரவில் உடைக்கப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் கற்கள் வீசப்பட்டது. இதனையடுத்து இன்று வேதாரண்யத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் கோபி நயினார் தலைமையில் நடைபெற்றது, இதனால் விரைந்த மீஞ்சூர் போலிசார் நயினாரை கைது செய்துள்ளனர். இது குறித்து கோபி நயினாரிடம் கேட்ட போது முன்பெல்லாம் கலவரம் ஏற்பட்டால் அதில் முப்பது வயதுக்கு மேற்பட்ட நபர்களே பார்க்க முடியும் ஆனால் இந்த கலவரத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் இளைஞர்கள் தான், இந்த அளவிற்கு ஜாதி வெறி இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு திணிக்கபடுகிறது என்பது தான் தெரியவில்லை என்று கூறியுள்ளார். அவர் கூறியதுபோல் இன்றைய நாளில் பரவலாக இளைஞர்கள் மத்தியில் ஜாதி திணிப்பு செய்யப்படுகிறது. இன்றும் வேதாரண்யம் பகுதியில் சற்று பதட்டம் நிலவுகிறது. நாகபட்டினம் மாவட்டத்தில் குறைந்த அளவில் மட்டுமே இன்று பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் அங்கு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளை இயல்பு வாழ்க்கை திரும்புமா என்பதே கேள்வி குறியாய் உள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வெளியிட்ட அறிக்கையில் இரு சமூகத்தினரிடையே நடந்த கலவரம் தமிழன் முன்னேற்ற பாதையில் செல்லாதே தவிர ஜாதியை திணிக்கும் அரசியல்வாதிகளுக்கு விருந்தாக அமையும் என்று சாடியுள்ளார். சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதேபோல் பல்வேறு கட்சி தலைவர்கள் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடனடியாக தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு சிலை சரிசெய்யப்பட்டது.

இருந்தபோதிலும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. தஞ்சை, கோவை, நாகபட்டினம் உள்ளிட்ட மாவட்டகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் நாகப்பட்டினத்தில் பல்வேறு எண்ணிக்கையில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர், மேலும் அதிவிரைவு படையினர் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்

இதனால் அங்கு பரபரப்பு குறைய வாய்ப்புள்ளது என நம்பப்படுகின்றது. நாளையவது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புமா? தமிழக அரசு இந்த கலவரத்தில் அதீத நடவடிக்கை எடுக்க வேண்டும், இதே நிலமை தொடர்ந்து நிலவினால் தமிழகத்தின் நாளைய இளைஞர்கள் இந்த வெறி செயலை செய்து கலவரத்தை தூண்டுவது இயல்பாகி விடும் எனவே தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து சமூகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்