தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க உள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழக கட்சி யை தொடங்கி உள்ளார். இதனை தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வந்தனர். கட்சி ஆரம்பித்த நாள் முதலே சட்டமன்ற தேர்தலை சந்திக்க விஜய் வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கட்சியின் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார் நடிகர் விஜய். இந்த மாநாட்டில் தங்களது கொள்கைகள் என்ன என்பதை நிர்வாகிகளுக்கு தெளிவாக விளக்கி உள்ளார் விஜய். தற்போது இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் வர காரணமும், கொடி வரலாறு குறித்து உருவாக்கிய வீடியோவை மக்களுக்காக வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
Embed Video Credits : Tamilaga vettri kazhagam