நான் பயந்துட்டேனு அர்த்தம் இல்லை..! நான் நாகரீகமான அரசியல்வாதி..! TVK விஜய்..!

நடிகர் விஜய் புதியதாக தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை இன்று பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார். நீண்ட நாட்கள் இவர் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த நிலையில், தற்போது கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தி உள்ளார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என கூறிய அவர், இன்று மாநாட்டை நடத்தி உள்ளார்.

நான் பயந்துட்டேனு அர்த்தம் இல்லை..! நான் நாகரீகமான அரசியல்வாதி..! TVK விஜய்..! 1

விளம்பரம்

விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி ஏரியாவில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதம் மேலாக மாநாட்டுக்கான பணிகள் அங்கு நடந்து வருகிறது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு பணிகளை விரைந்து முடித்து இருக்கிறார். அதன்படி இன்று மாநாட்டிற்கு மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி உள்ளது.

நான் பயந்துட்டேனு அர்த்தம் இல்லை..! நான் நாகரீகமான அரசியல்வாதி..! TVK விஜய்..! 3

விளம்பரம்

இந்த மாநாட்டில் பேசிய அவர், தான் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்பதற்காக பயந்துவிட்டேன் என்று அர்த்தம் கிடையாது.நான் இங்கு நாகரிக அரசியல் செய்ய வந்து உள்ளேன். அதுபடிதான் நடந்துகொள்வேன். பிறரை தாக்கி பேச வேண்டும் என்பது எனது எண்ணம் இல்லை. ஆனால் விமர்சனம் செய்வேன் அது ஆழமாக இருக்கும் என நடிகர் விஜய் கூறி உள்ளார்.

தொடர்புடையவை  திராவிட மாடல் பெயரில் குடும்ப ஆட்சி...! DMK-ஐ இறங்கி அடித்த விஜய்..! அதிர்ச்சியில் DMK..!

விளம்பரம்

Embed Video Credits : Tamilaga Vettri Kazhagam

விளம்பரம்

Leave a Comment