தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு இனி படத்தில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்து உள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் இலக்கு என கூறிய அவர் யாருடனும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை இன்று விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் ரசிகர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து நடிகர் விஜயை காண கூட்டமாக வருகை தந்து உள்ளனர். மாலை நடைபெறும் மாநாட்டிற்கு காலையிலேயே அனைவரும் வந்ததால், சீக்கிரமாக விஜய் மாநாட்டை நடத்தி உள்ளார். இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், திமுக மற்றும் பாஜகவை மேலோட்டமாக விமர்சனம் செய்து உள்ளார். மேலும் தாங்கள் பெயரை சொல்லவில்லை என்றால் பயந்து விட்டோம் என்று அர்த்தமில்லை எனவும் கூறி உள்ளார்.

மேலும் பேசிய அவர், திராவிட மாடல் என்கிற பெயரில் பெரியார் அண்ணா போட்டோக்களை வைத்து கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி திங்கும் குடும்ப சுயநலம் உடையவர்கள் தங்களது அரசியல் எதிரி என திமுகவை தாக்கி பேசி உள்ளார்.
Embed Video Credits : Tamilaga Vettri Kazhagam