உலக குத்துசண்டை போட்டி: இந்தியாவிற்கு வெள்ளி!

உலக குத்துச்சண்டை தொடர் போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல் வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் இரண்டாம் நிலையான பங்கல் உலக தொடரில் இண்டாவது இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர்ராவார்.

ரஷியாவில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை தொடர் போட்டியின் இறுதி சுற்று இன்று (செப்.21) நடைபெற்றது. இதில் 52 கிலோ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஷாகோபிடின் சோயிரோவும், இந்தியாவின் ஆசிய சாம்பியனான அமித் பங்கலும் மோதினர்.

விளம்பரம்
உலக குத்துசண்டை போட்டி: இந்தியாவிற்கு வெள்ளி! 1

இப்போட்டியில், பங்கல் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை தொடரின் வரலாற்றில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் வெள்ளி பதக்கத்தை பங்கல் வென்று சாதனையை பதிவு செய்துள்ளார்.

இதைத்தவிர, அரை இறுதி போட்டியில் தோல்வியடைந்த மனிஷ் கவுசிக் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதன்படி இந்தியாவிற்கு இந்த சீசனில் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

விளம்பரம்

இதற்குமுன், விஜேந்திரர் சிங் (2009), விகாஸ் கிருஷ்ணன் (2011), ஷிவா தபா (2015), கவுரவ் பிதுரி (2017) ஆகியோர் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment