தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த மாதம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவரை காண அங்கு திரண்ட மக்கள் கூட்டத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சோக நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்சா என பலரும் இந்த நிகழ்விற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு ஏன் செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது என்பது திட்டமிட்டது இல்லை, இந்த சம்பவம் நடக்கவேண்டும் என்பது திட்டமிட்டது இல்லை,ஆனால் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்நோக்கம் இருப்பதாக கூறி வருவதால் அவர்களை விமர்சிக்க வேண்டி இருக்கிறது.

விஜயை கைது செய்யவேண்டும் என்பது எங்களது நோக்கமில்லை, விஜய் இதற்காக வருந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இதனை அரசியல் உள்நோக்கத்தோடு விஜய் மடைமாற்றம் செய்ய முயற்சி செய்கிறார் என கூறி உள்ளார்.