உலகம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளதே, இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். தமிழில் இதுவரை இந்த நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து 8வது சீசனில் அடியெடுத்து வைத்து உள்ளது. கடந்த 7சீசன்களும் மக்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

தற்போது 8வது சீசன் தொடங்கி இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில், தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா, மஞ்சரி , ரயான், ராணவ் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டு அசத்தி வந்தனர்.

இறுதி வரை வந்த முத்துக்குமரன் , சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் ஆகியோர்களில் , முத்துக்குமரன் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பெற்றுள்ளார். மேலும் மூன்றாவது இடத்தை விஜே விஷால் பெற்று உள்ளார்.