உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பி வி சிந்து

வெளியிட்டது
உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பி வி சிந்து 1

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் விளையாட்டு வீராங்கனை பி வி சிந்து தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் பசல் என்ற இடத்தில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை ஓகுஹாரவை எதிர்த்து போட்டியிட்டார் இதில் தொடக்கம் முதல் ஆட்டம் பி வி சிந்து வசம் இருந்த நிலையில் 21-7 என்ற நிலையில் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனையான ஓகுஹராவை வீழ்த்தி முதல் சுற்றை தன்வசம் கொண்டுவந்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் மேலும் ஆதிக்கத்தை நிலைநாட்டி 21-7 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார், இறுதியில் ஆட்டத்தை மிக எளிதாக தம்வசப்படுத்தி, பதக்கத்தை வென்றார் பி வி சிந்து. மேலும் பேட்மிண்டன் விளையாட்டில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். இந்த பதக்கம் வென்ற நிலையில் இந்தியாவிற்கு இது ஐந்தாவது முறையாக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு இதே போட்டியில் வெள்ளி பதக்கமும், 2017 ஆம் ஆண்டும் வெள்ளி பதக்கம் வென்றார். 2013 மற்றும் 2014 களில் வெண்கல பதக்கம் வென்றார். இந்த ஆண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பி வி சிந்து. 1977 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த தொடர் நடைபெற்றது, அதிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை இந்த சாம்பியன்ஷிப் தொடர் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தான் நடைபெற்றது. அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்த சாம்பியன்ஷிப் தொடர் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடை பெற்றது. 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்த தொடர் ஆண்டுதோரும் நடைபெற்று வருகிறது. இந்த 42 வருட உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன் முறையாக இந்தியா தங்க பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து டிவிட்டர் பக்கத்தில் பல பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன சிந்துவிற்கு. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார். பி வி சிந்துவிற்கு இந்தியாவில் ரசிகர்கள் கோலாகல வரவேற்ப்பு கொடுத்தனர்.இதுமட்டுமின்றி பி வி சிந்து தனது வெற்றியை அவரது தாயிற்கு பிறந்தநாள் பரிசாக தெரிவித்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்