உலக நாடுகளில், நோயாளிகளின் பாதுகாப்பு என்பது ஒரு முக்கிய பிரச்சினையாகும். ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் தரம் குறைந்த சேவைகளாலும், பாதுகாப்பற்ற சுகாதார பராமரிப்பு காரணமாகவும் இறக்கின்றனர். சுகாதார சேவையின் போது எந்த ஒரு நோயாளிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக, உலக சுகாதார அமைப்பு (WHO) ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் தேதி ‘உலக நோயாளி பாதுகாப்பு தினத்தை’ கொண்டாட சுகாதார சேவையை பாதுகாப்பானதாக்குவதற்கும் உலக அளவில் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் உறுதி ஏற்றுக்கொண்டது. அதன்படி இந்த ஆண்டிற்கு கருப்பொருளாக ‘நோயாளியின் பாதுகாப்பிற்காக பேசுவோம்’ என்பதாகும்.
குடும்பங்கள், நோயாளிகள், பராமரிப்பாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்து நோயாளியின் பாதுகாப்பான சுகாதாரதிற்கு ஒரு பகுதியாக இத்தினம் இருக்கும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாதுகாப்பற்ற சுகாதார நிலைகளால் ஒவ்வொரு 10 நோயாளிகளில், 4 பேர் விகிதம் வருடம் ஒன்றிருக்கு சுமார் 2.6 மில்லியன் இறப்புகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும், நடுத்தர மற்றும் பின்தங்கிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பற்ற சுகாதார கவனிப்புகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 134 மில்லியன் அளவிற்கு பாதகமான நிகழ்வுகள் பதிவாகின்றன.
உலக சுகாதார அமைப்பில் உறுப்பினர்களான 194 நாடுகளை ஒருங்கிணைத்து நோயாளி பாதுகாப்பு தினத்தை அனுசரிக்க ஒப்புதல் அளித்துள்ளன. இது உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு உலகளாவிய சுகாதார பாதுகாப்பை உறுதி செய்கிறது.

உலக நோயாளி பாதுகாப்பு தினத்தின் முக்கியத்துவம்:
உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினம் உலகளவில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிலையான வளர்ச்சியை அடைவதற்கும், உலகளாவிய சுகாதார பாதுகாப்பு உறுதி செய்வதற்கும், நோயாளியின் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தலும், நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயத்தைக் குறைக்க சுகாதாரத் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தலும் மற்றும் நோயாளியின் பாதுகாப்பு தொடர்பான பயிற்சியும், கல்வியையும் முன்னிலைப்படுத்துவது இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.
ஏன் நோயாளியின் பாதுகாப்பு முக்கியமானது?
நோயாளிகளின் பாதுகாப்பு என்பது உலகளாவிய சுகாதார மீதான அக்கறையாகும். இதன் முக்கிய அம்சமானது, பாதுகாப்பற்ற சுகாதார முறையால் ஏற்படும் நோயாளியின் மரணம், பாதகத்தை ஏற்படுத்துகிறது. நோயாளியின் சுகாதார நிலை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை கண்டறிவதில் ஏற்பட்ட பிழை காரணமாக நோயாளிகளுக்கு குறைபாடோ அல்லது இறப்போ நிகழ்வதாக சமீபத்திய சான்றுகள் சுட்டி காட்டுகின்றன. தவறான மருத்துவ உதவியைச் சமாளிக்க பல பில்லியன்கள் செலவிடப்படுவதால், வரவு, செலவு திட்டத்தை பாதிக்கிறது.
மேலும், நோயாளிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செலவு அவர்களின் சிகிச்சையுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது என்பதை சுகாதாரத் துறைகள் புரிந்து கொள்ள வேண்டும். நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மருத்துவமனைகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ பிழைகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மருத்துவமனைகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள்:
- கைகளை கழுவுதல், சருமத்தை சுத்தம் செய்தல் மற்றும் இரத்த ஓட்டத்துடன் தொடர்புடைய தொற்றுநோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கைகளைப் மேம்படுத்துதல்.
- சரியான நேரத்தில் மருந்துகளை நோயாளி எடுத்துக் கொள்கிறாரா என்பதனை கண்காணிக்க தனி ஊழியரை நியமித்தல்.
- சிகிச்சையின் பின்னர் நோயாளிகளுக்கு, அவர்களின் மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதையும், மருந்துக்களை எப்போது எடுக்கக்கூடாது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
- நோயாளியின் ஓய்வை உறுதி செய்வதனால், அறுவை சிகிச்சை செய்யும் போது தவறுகள் ஏற்பட வாய்ப்பு குறைகிறது. இதனை கண்காணிக்க வேண்டும்.
- நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்து, அதனை நோயாளி பாதுகாப்பு அமைப்புடன் பகிர வேண்டும். மேலும் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது பிழைகள் மற்றும் தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.
- மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியின் பாதுகாப்பு கலாச்சாரங்களை நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்வது முக்கியமானது.
- நோய்த்தொற்றுகள் பரவாமல் இருக்க மருத்துவமனையின் தூய்மையை உறுதி செய்தல் அவசியமானது.
உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட சர்வதேச நோயாளி பாதுகாப்பிற்கான இலக்குகள் பின்வருமாறு:
- நோயாளிகளை சரியாக அடையாளம் காண வேண்டும்.
- நோயாளிகளுக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் இடையிலான தகவல்தொடர்புகளை மேம்படுத்த வேண்டும்.
- உயர் எச்சரிக்கை மருந்துகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
- ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கப்படும் மருந்துக்கள், சிகிச்சைகள் ஆகியவற்றை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
- மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்ச்சைகளால் ஏற்படும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் சிவாங்கி கர்ன்
தமிழில் தமிழ்முரசு
நன்றி Boldsky