உலக மல்யுத்தம் போட்டி: சுசில் குமார் தோல்வி

உலக மல்யுத்தம் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரரான சுசில் குமார் தோல்வியடைந்துள்ளார்.

கஜகஸ்தானில் நடைபெரும் வரும் உலக மல்யுத்த போட்டியில் 74 கிலோ பிரிவில் இந்தியாவின் சுசில் குமார் பங்கேற்றார். தனது முதல் சுற்றில் 9-11 என்ற கணக்கில் அஜர்பைஜானின் காட்ஜிமுராட் காட்ஜியேவிடம் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆட்டத்தின் முதல் சுற்று முடிவில், 9-4 என முன்னிலையில் இருந்தார் சுசில். ஆனால் இரண்டாவது சுற்றில் ஆட்டம் தலைகீழாக மாறி தோல்வியை சந்தித்தார் சுசில்.

125 கிலோ பிரிவில் காமன்வெல்த் சாம்பியன் சுமித் மாலிக் 0-2 என்ற கணக்கில் ஐரோப்பிய சாம்பியனான ஹங்கேரியின் டேனியல் லிகேடியிடம் வெற்றியை இழந்தார்.

உலக மல்யுத்தம் போட்டி: சுசில் குமார் தோல்வி 1

70 கிலோ பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் கரண் 0-7 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் இக்தியோர் நவ்ருசோவிடம் தோல்வியை சந்தித்தார்.

அதேபோல், 92 கிலோ பிரிவில் கொரியாவின் சாங்ஜே சூவுக்கு எதிரான தனது முதல் சுற்றில் 12-1 என்ற கணக்கில் பிரவின் ராணா தோலிவியடைந்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் 7 ஆம் நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சுஷில் குமார், சுமித் மாலிக் மற்றும் கரண் மோர் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்