
இந்தியன் தொழில்நுட்ப நிறுவனம்-குவஹாத்தி (ஐ.ஐ.டி-ஜி) ‘ஸ்மார்ட்-இன்ஜினியர்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிவிஷியல் இன்டலிஜன்ஸ்) உதவி பொறியியல் அமைப்பு வடிவமைப்பு கருவி உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. நாட்டின் சாலைகளில் மின்சார வாகனங்கள் (ஈ.வி.க்கள்) அதிக அளவில் ஊடுருவிச் செல்ல இத்திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
ஐ.ஐ.டி-ஜி, மின்னணு மற்றும் மின் பொறியியல் துறை (இ.இ.இ) பேராசிரியர் பிரவீன் குமார் அவர்கள்,
“ஸ்மார்ட்-இன்ஜினியரின் தற்போதைய பதிப்பானது தூண்டல் மோட்டார்கள் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள அடிப்படைகளை நிவர்த்தி செய்ய முடியும். ஆரம்ப முடிவுகள் மிகவும் நம்பிக்கைக்குரியவை, மேலும் மோட்டார் வடிவமைப்பின் சிறந்த அம்சங்களைச் சேர்க்க ஸ்மார்ட்-இன்ஜினியரின் திறனை விரிவுபடுத்தவுள்ளோம்”
என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஐபிஎம் வாட்சன் ஏஐ பிளாட்ஃபார்ம் மற்றும் ஐபிஎம் கிளவுட் ஆகியவற்றைக் கொண்டு பிஎச்டி மற்றும் முதுநிலை மாணவர்களான ராஜேந்திர குமார், பிகாஷ் சா, அங்கித் விஷ்வே மற்றும் ராஜேந்திர குமார் ஆகியோரைக் கொண்ட குழு இந்த கருவியை உருவாக்கியுள்ளது.
“நாங்கள் பல ஆண்டுகளாக மின்-இயக்கம் ஆய்வகத்தில் (ஈ.எம்.எல்) சேகரித்த மோட்டார் வடிவமைப்பின் அறிவை நாங்கள் தொகுத்து வருகிறோம், மேலும் இந்த அறிவு களஞ்சியத்தை ஐ.பி.எம் இன் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் திறன்களுடன் இணைந்து ஸ்மார்ட்-இன்ஜினியரை இன்னும் சிறந்ததாக மாற்றுவோம்”
என்றும் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நிபுணத்துவ பொறியியலாளர்களின் கூட்டு அறிவை சேமித்து பராமரிக்க நிறுவனங்களுக்கு உதவும். இதன் விளைவாக வடிவமைப்பு சிந்தனை / தத்துவத்தில் மேலும் தத்துவார்த்த மற்றும் நடைமுறை முன்னேற்றங்களை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் முடியும். ஐ.ஐ.டி-ஜி-யின் இ-மொபிலிட்டி ஆய்வகத்தால் கட்டப்பட்ட ‘ஸ்மார்ட்-இன்ஜினியர்’, ஈ.வி தொழில்நுட்பத்தை உள்நாட்டுவதில் முதன்மை தடைகளில் ஒன்றை நிவர்த்தி செய்ய முற்படுகிறது.