ஒலிம்பிக்கில் கபடி: அமைச்சர் நம்பிக்கை

கபடி விளையாட்டினை வருகிற 2024 ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் (தனி) கிரென் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நமது உள்நாட்டு விளையாட்டு வெற்றிகரமாக வளர்ந்திருப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கபடி விளங்குகிறது. அடுத்து நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டியில், கபடியை சேர்க்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பல கோடி மக்கள் வாழும் நாடாக இருக்கும் நாம், ஒன்றிணைந்து செயல்பட்டால் இது சாத்தியமாகும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலில் ஒரு விளையாட்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒப்புதலை பெற வேண்டும். அதன் பிறகு அந்த விளையாட்டிற்கென சர்வதேச கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதன் பிறகே ஒலிம்பிக் போட்டியில் அந்த விளையாட்டை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க முடியும். இதான் இப்போதைய விதி முறைகள்.

ஆனால், கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி கூடிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, வரும் 2024 ஒலிம்பிக்கில் எந்த ஒரு போட்டியையும் புதிதாக சேர்க்க முடியாது என்று தெரிவித்து விட்டது.

ஒலிம்பிக்கில் கபடி: அமைச்சர் நம்பிக்கை 1

வரும் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரான்ஸ் நாடு, புதிய விளையாட்டுகளை சேர்ப்பதற்கு விண்ணப்பித்துள்ளது. இவற்றை தணிக்கை செய்த பிறகு 2020 டிசம்பர் மாதம் இது குறித்தான அறிவிப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவிக்கும்.

தற்போது வரை கபடி விளையாட்டில் இந்திய ஆண்கள் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் 7 முதல் வென்றுள்ளது. அதே போல் பெண்கள் அணி கடந்த ஆண்டு இரானிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்