
மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை விடுவதில் எவ்விதமான மாற்றமும் இல்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும், தேர்வு முடிந்த பின்னர் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை காந்தியின் 150வது பிறந்த நாளை ஒட்டி இந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பல பரவி வருகின்றன. அத்துடன் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை எடுக்க உத்தரவிடப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை விடுவதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும்,மாணவர்களுக்கு எவ்விதமான வகுப்புகள் விடுமுறை காலங்களில் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. அத்துடன் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் மட்டும் நடத்தலாம் என்றும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம் கூறப்பட்டுள்ளது.
மேலும், காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்றும் இது போன்ற வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.