ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட கோரி அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தியின் இளைய மகள் இல்டிஜா முப்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இல்டிஜா முப்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள இ-மெய்லில், சிறப்பு அந்தஸ்தான 370ஆம் சட்ட பிரிவை ரத்து செய்யப்பட்ட பின்னர், போராட்டத்தை தடுக்கும் வகையில் கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை கோரியுள்ளார்.
அக்கடிதத்தில், அடிப்படையில் நான் அரசியல்வாதி கிடையாது. ஆனால் நான் இந்த தகவல்களை என்னுடைய தாயாருக்கு பதிலாக கேட்கிறேன். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து வீட்டு காவலில் இருக்கும் என்னுடைய தாயாருக்கு, செய்தி தாள்களை படிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கட்சி உறுப்பினர்களிடமிருந்தோ, அவரது ஊழியர்களிடமிருந்தோ எந்த ஒரு தகவலும் அவருக்கு கிடைப்பதில்லை என்று தெரிவித்திருந்தார் என்றார்.

மேலும், யாரெலெல்லாம் பொது சமூகத்தில் ஊடுருவ விடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டோர், வீட்டு காவாலில் வைக்கப்பட்டுளோர் மற்றும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளோர் ஆகியோரின் விபரங்களை கேட்டுள்ளார். அதே போல், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களை குறித்தும் தகவல் கேட்டுள்ளார்.
கம்மு காஷ்மீரில் குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.