Categories: சமூகம்

கேப் டவுனாக மாறி வருகிறதா சென்னை மற்றும் பெங்களூரு..?

வெளியிட்டது
கேப் டவுனாக மாறி வருகிறதா சென்னை மற்றும் பெங்களூரு..? 1

சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்கள் கேப் டவுன் போல் ஆகிவிடும் என்று இந்தியாவின் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் நேற்று புதன்கிழமை அன்று மக்கள் அனைவரும் நீரைச் சேமிக்க வேண்டும். அவ்வாறு தவறினால் இந்தியாவின் பல பகுதிகள் பாதிக்கப்படும் என்றும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்கள் “கேப் டவுன்” போல் மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார். கடந்த 2017- 2018ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் தலைநகரமான கேப் டவுனில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் “டே சீரோ” என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே சென்றால் தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும். தண்ணீர் சேமிப்புத் திட்டம் பல இடங்களில் செய்யாமல் இருப்பதாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. மேலும் சுதந்திரத்தின் போது தனிநபர் நீர் கிடைப்பது 5,000 கன மீட்டரிலிருந்து 1,540 கன மீட்டராக குறைந்துள்ளது. இவ்வாறு சென்றால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

இந்தியாவில் ஆண்டுக்கு 1068 மி.மீ அளவுக்கு மழை பெய்கிறது. அதன் மூலம் 4,000 மில்லியன் கன மீட்டர் வருகிறது. இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்குக் காரணம் மோசமான நீர் மேலாண்மை ஆகும். இஸ்ரேலில் ஆண்டிற்கு 100மி.மீ அளவிற்கே மழை பெய்யும். ஆனால் அவர்களுக்கு நீர் அதிகமாகவும் உள்ளது. அதனை ஏற்றுமதியும் செய்கிறார்கள். இவ்வாறு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் நீர் சேமிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்